திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -51

அளவு இல் இளமையும் அந்தமும் ஈறும்
அளவு இயல் காலமும் நாலும் உணரில்
தளர்வு இலன் சங்கரன் தன் அடியார் சொல்
அளவு இல் பெருமை அரி அயற்கு ஆமே

என்றுங் குன்றா எவ்வளவையையும் கடந்த இளமையும், அழகும், பேரொடுக்கமாகிய ஈற்றினைச் செய்யும் பெருமையும், அளவில்லாத காலம் நானும் இருந்து உணர்ந்தாலும் முடிவு பெறாது. சங்கரனாகிய சிவனும் நம்முடைய ஆய்வுக்கு எட்டுவதாகிய தளர்வினை எய்தான். தன் அடியார் அருளால் கூறும் அளவில் பெருமை அனைத்தும் உடையன். அத்தகைய சிவபெருமான் பெருமையினை அரிஅயன் இருவராலும் சொல்லவொண்ணாதென்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *