திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -52

ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்
ஆதிக் கமலத்து அலர் மிசையானும்
சோதிக்கில் மூன்றும் தொடர்ச்சியில் ஒன்று எனார்
பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே.

அனைத்துலகினுக்கும் அந்தத்தைச் செய்து பின் படைக்குங்கால் ஆதிப்பிரானாக நிற்கும் அரனும், அழகிய நீலமணி போலும் அரியும், உலகப் படைப்புக்குக் காரணனாகிய அயனும் என்று சொல்லப்படும் மூவரும் தொழில் பற்றி முறையே முப்பெயர் பெற்றனர். அஃதல்லாது பொருளால் மூவரல்லர். அருளால் ஆராய்ந்து நோக்கின் மூன்று நிலையும் ஒரு முழுமுதற் சிவனுக்கே யுரியன என்பது புலனாகும். இக் கருத்தமையத் தொடர்பினால் ஒன்றே முழுமுதல் என்று கூறாது, வேறு வேறு உலகோர் மாறுபடக் கூறித் தம்முள் பிணங்கி மயங்குகின்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *