திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -55

பயன் அறிந்து அவ்வழி எண்ணும் அளவில்
அயனொடு மால் நமக்கு அன்னியம் இல்லை
நயனங்கள் மூன்று உடை நந்தி தமர் ஆம்
வயனம் பெறுவீர் அவ் வானவராலே

மேலோதிய முறையின் உண்மைப் பயனை அறிந்து எண்ணுமிடத்து, அயனுடன் மாலும் நாம் தொழும் தன்மையரேயன்றி நமக்கு வேறானவராகார். ஆனால் இவ்வயனும் மாலும் முதற்கண் சிவனே. பின்பு அவனருள் பெற்று முப்பத்திரண்டாம் நிலையாகிய ஆசான் (சுத்த வித்தை) மெய்க்கண் உறையும் வழிப்பேற்றுயிரினத்தவரேயாவர். இவர்களே இருபத்து நான்காம் தத்துவத்தில் உறைகின்ற கட்டுயிராகிய மும்மலத்தயன் மால் இருவரையுந் தொழிற்படுத்தும் முதன்மையினை அருள் ஆணையால் பெற்றவர். கீழுள்ள. அயனும் மாலும் ஆகிய இருவருமே அவர்தம் பேதைமை காரணமாகச் செந்நெறி முதல்வர்களால் புறக்கணிக்கப்பட்டவர்.

மூன்று திருக்கண்களையுடைய சிவபெருமான் தூமாயைக்கண் வைகும் அயன்மாலிருவரையும் தமரெனக் கொள்வர். இம் முறைமை அறிந்து அவரையும் தொழுக. அவரால் ஆம் நன்மையினையும் பெறுக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *