99

மகிழ்ச்சியாக இரு ! ! !

தகப்பனே கொலை செய்ய
முயற்சித்த போதும்
பிரகலாதன்
மகிழ்ச்சியாக இருந்தான் . . .

சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
அரிச்சந்திரன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும்
கைகேயி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .

உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதிலும்
விதுரர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

அம்புப்படுக்கையில் வீழ்த்தப்பட்ட போதிலும்
பீஷ்மர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

இளம் விதவையான சமயத்திலும்
குந்திதேவி
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .

தரித்ரனாக வாழ்ந்த போதிலும்
குசேலர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பிறவிக் குருடனாக இருந்த போதிலும்
சூர்தாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

மனைவி அவமானப்படுத்திய போதிலும்
சந்த் துக்காராம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கணவன் கஷ்டப்படுத்திய போதிலும்
குணவதிபாய்
மகிழ்ச்சியாக இருந்தாள் . . .

இருகைகளும் வெட்டப்பட்ட போதிலும்
சாருகாதாஸர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கைகால்களை வெட்டிப் பாழுங்
கிணற்றில் தள்ளிய போதிலும்
ஜயதேவர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

மஹாபாபியினிடத்தில்
வேலை செய்த போதிலும்
சஞ்சயன்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதிலும்
பூந்தானம்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்திய போதிலும்
தியாகராஜர்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதிலும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த போதிலும்
கூரத்தாழ்வார்
மகிழ்ச்சியாக இருந்தார் . . .

இவர்களால் எப்படி
மகிழ்ச்சியாக இருக்க முடிந்தது ?

அதுதான் பிரம்ம ரகசியம் என்பது…..!

தன்னோடு இறைவன் எப்பொழுதும்
இருக்கின்றான்
என்று உணர்ந்ததால் !!!

இறைவன் எப்பொழுதும் தன்னோடு
இருக்கின்றான்
என்று உணர என்ன வழி?

தன்னை அறிந்தால்
தன் தலைவனை அறியலாம் . . .

தன்னை அறிய
தன்னை உணர்ந்த
உண்மை குருவை
நாடுவதே சிறந்த வழி…

அதனால் இனி வாழ்வில் நிகழும்
சின்ன சின்ன விஷயங்களுக்காக
கலங்காதே!

எது எப்படி இருந்தாலும்,
எது எப்படி நடந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
யார் எப்படி மாறினாலும்,
எதை இழந்தாலும்,
யாரை இழந்தாலும்,
உன் இறைவன் உன்னுடன்
எப்போதும் இருக்கின்றான்
என்பதை முழுமையாக நம்பு….

இறைவன் எப்போதும்
உன்னோடு இருப்பதை
உணரும் வழியை நாடு….

நீயும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு,
பிறரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு.
உன் எல்லா துன்பங்களில் இருந்தும்
அப்போதே விடுதலை கிடைக்கும்…..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>