திருமந்திரமாலை – பாயிரம் -மும் மூர்த்திகளின் முறைமை -59

பரத்திலே ஒன்றாய் உள்ளாய்ப் புறம் ஆகி
வரத்தினுள் மாயவனாய் அயன் ஆகித்
தரத்தினுள் தான் பல தன்மையன் ஆகிக்
கரத்தினுள் நின்று கழிவு செய்தானே.

சிவபெருமான் கடந்த மேனிலையுள் ஒன்றேயாய் உள்ளும் புறம்புமாய் விரவி நின்றருள்வன். உயிர்கள் பிறப்பினுள் வருதலாகிய வரத்தின்கண் அயனாய் (காப்பின்கண்) மாயனாய் அம்முறைபோல் இன்னும் பலவாய்த் தோன்றியருள்வன். கரத்தலாகிய மறைப்பினுள் ஆண்டானாய் நின்று ஆருயிர்கட்கு வினைக்கழிவு செய்தருள்கின்றனன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *