அனுபவம்

நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன ; ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளில் இருந்து கிடைக்கிறது .

ஒரு ஊரில் ஒருவன் வீட்டுத் தோட்டத்தில் மா மரம் ஒன்று இருந்தது . திடீரென்று அந்த மரம் பட்டுப் போய் விட்டது . அவனை சந்தித்த பக்கத்து வீட்டுக்காரன் ‘மரம் பட்டுப் போய் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது என் அனுபவத்தில் கண்ட உண்மை இது . உன் நன்மைக்கு தான் சொல்கிறேன் உடனே அதை வெட்டி விடு’ என்றான் .
அவனும் அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினான் .
மீண்டும் பக்கத்து வீட்டுக்காரன் அங்கு வந்தான் .” இவ்வளவு விறகை நீ என்ன செய்யப் போகிறாய் ? வீணாகத் தானே போகப் போகிறது . அந்த விறகில் எனக்கும் ஒரு பங்கு கொடு “என்றான் .
ஆ ! என்ன தவறு செய்து விட்டேன் ? பட்ட மரமாக இருந்தால் என்ன ? என் தேவைக்கு மட்டும் அதில் விறகை வெட்டி எடுத்து இருக்கலாமே …… பக்கத்து வீட்டுக்காரனுக்கு விறகு தேவை . இதை அறியாமல் அவன் என் நல்லதற்கு தான் சொல்லுகிறான் என்று அப்படியே செய்தேனே என்று வருந்தினான் அவன் .      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *