குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-64

குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
பரிமேலழகர் உரை: 
அமிழ்தினும் ஆற்ற இனிதே – சுவையான அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் – தம் மக்களது சிறுகையான் அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது, ‘இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் – நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188).
Translation:

Than God’s ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play’d.

Explanation:

The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *