பிரம்மஹத்தி தோஷம்

பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? இதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். பிரம்மன் மனித உயிர்களைப் படைக்கிறார். அந்த உயிர்களுக்கு மண்ணுலகில் உள்ள வாழும் காலம் முடிந்தபிறகு இறைவனே எடுத்துக்கொள்வார்.

இந்த உண்மைக்கு மாறாக, போட்டி, பொறாமை காரணமாக ஆணவத்துக்கு இடம் கொடுத்து வாழ்பவர்கள், தங்களுக்குப் பிடிக்காதவர்களைப் பழிவாங்கும் போக்கைத் தொடர்கின்றனர்.

அப்படிப் பழிவாங்கும்போது, சொத்துக்காகவும், பொன்னுக்காகவும், பெண்ணுக்காகவும், இரக்கமின்றி ஒரு உயிரைக் கொலை செய்து விடுகின்றனர்.

ஒரு கொலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்பட்டுவிடுமா,என்ன? கொலை செய்தவர்களையும் அவர்கள் சந்ததியினரையும் இந்தபாவம் பிடித்துக்கொள்ளும். இந்த பெரும்பாவமே சம்பந்தப்பட்டவர்களை தோஷம் என்று தொத்திக்கொண்டு விடுகிறது. இதுவே ‘ பிரம்மஹத்தி ‘ தோஷம் என்பதாகும்.images (25)

ஸ்ரீராமபிரானுக்கே பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். சீதாபிராட்டியாரை சிறையெடுத்த காரணத்துக்காக மட்டுமல்ல; இராவணனின் அட்டூழியத்திலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றவுமே, இராவணனை வதம் செய்தார், ராமபிரான். இராவணனை வதம் செய்த காரணத்தால், பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்தார்.

எனவே, பிரம்மாவால் படைக்கப்பட்ட மனித உயிர்களை கொலை செய்தவர்கள் , கொலைக்கு என்ன புனிதமான காரணம் இருந்தாலும், பிரம்மஹத்தி தோஷத்தை அடைகிறார்கள். நமது முன்னோர்கள் யாரையும் கொலை செய்திருந்தால், அந்த தோஷம் அவர்கள் சந்ததியினரைத் தொடர்ந்து வரும்.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான், குருவுடன் இணைந்தாலோ , குரு பகவான் சனி பகவானுடன் இணைந்தாலோ , இந்த இரு கிரகங்களுக்கும் சார பரிவர்த்தனை ஏற்பட்டாலோ, , சப்தம பார்வை பெற்றாலோ அவர் பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளலாம்.

இப்படிப்பட்ட தோஷம் உள்ளவர்கள் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்கள் குடும்பத்தில் ஒற்றுமை இருக்காது. காலதாமதத் திருமணம், காலதாமத புத்திர பாக்கியம், தீராத கடன் தொல்லை , கல்வித் தடை , சரியான வேலைவாய்ப்பின்மை, அலைந்து திரிந்து கடுமையாக உழைத்தாலும் போதிய சம்பளம் கிடைக்காத நிலை , கனவுத் தொல்லைகள், தாங்கள் நடத்திவரும் தொழிலுக்கு வேலைக்காரர்கள் கிடைக்காத நிலை போன்ற பல குழப்பங்கள் இருந்து வரும்.

இதுபோன்ற நிலையில் , பிரம்மஹத்தி தோஷம் விலகப் பரிகாரங்கள் செய்து வாழ்வை வளமாக்கலாம். :

பரிகாரம் 1.:-

ஏற்கெனவே கூறியிருந்தபடி, பிரம்மஹத்தி தோஷத்தை அடைந்த ஸ்ரீராமபிரான், பிரம்மஹத்தி தோஷத்தைக் கழிப்பதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்தார். இந்த இடம்தான், ராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள தேவிப்பட்டினம் என்னும் ஊர். இந்த தேவிப்பட்டினத்திற்கு சென்று ஒரு கடற்கரைக்குப் போய் அங்கு மண்ணால் நவகிரகங்களை நிர்மாணம் செய்து நவகிரகங்களுக்கு பரிகாரம் செய்து பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொண்டார். நீங்களும் அவ்விதமே செய்து பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக்கொண்டு வாழ்க்கையில் நன்மையடையலாம்.download (10)

பரிகாரம் 2.:

தேவிப்பட்டினம் செல்ல முடியாதவர்கள் கீழ்க்கண்டவாறு பரிகாரம் செய்யலாம்.
நல்லெண்ணெய்-1/2 லிட்டர்;
விளக்கெண்ணெய்-1/2 லிட்டர்;
நெய் 1/2 லிட்டர்;
இலுப்பை எண்ணெய் 1/2 லிட்டர்;
வேப்பேண்ணெய்-1/2 லிட்டர்;
மேல்லே கூறிய ஐந்துவகை எண்ணெய் வகைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ளவேண்டும். ஒரு அமாவாசை தினத்தன்று, மாலை ஐந்து மணிக்கு ஒரு சிவன் கோவிலில் மேற்கூறப்பட்டபடி கலந்து வைத்துள்ள எண்ணெயை ஊற்றி விளக்கேற்றவேண்டும். அது தவிர கீழ்க்கண்ட இடங்களிலும் அந்த எண்ணெயை அகல் விளக்குகளில் ஊற்றி தீபம் ஏற்றவேண்டும்.
1. பலிபீடம்;
2. கொடிமரம்;
3. கொடிமர நந்தி
4.அதிகார நந்தி;
5. வாயில் கணபதி;
6. துவார பாலகர்;
7.சூரியன், சந்திர பகவான்;
8. சமயக் குரவர்கள்;
9. சப்த கன்னிமார்கள்;
10. கன்னிமார் அருகில் உள்ள கணபதி;
11. வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சன்னிதி;
12. சுர தேவர்;
13. ஸ்வாமி அய்யப்பனின் சாஸ்தா பீடம்;
14. தட்சிணாமுர்த்தி
15. கால பைரவர்;
16. சண்டிகேஸ்வரர்;
17. சனீஸ்வரர்;
18. சிவன் சன்னிதி;
19. அம்பாள் சன்னிதி தவிர மற்ற துணை தெய்வங்கள்.

மேற்கூறப்பட்டவிதமாக விளக்கேற்றிவிட்டு, அர்ச்சனையும் செய்யவேண்டும். அர்ச்சனை செய்வது எப்படி என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த முறையில், அதாவது, சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும், வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஊதுவத்தி, சூடம், தேங்காய், அவரவர் விருப்பத்திற்கேற்ப ஸ்வாமிக்கும் அம்பாளுக்கும் பூமாலை ஆகிய பொருட்களை வைத்து அர்ச்சகர் மூலம் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த தீப பரிகாரத்தை குடும்பத்தில் உள்ளவர் அனைவரும் ஒரே இடத்திலும் ஒரே நேரத்திலும் இணைந்து செய்தால், உடனே பலன் கிட்டும். இந்த பரிகாரத்தை ஒருமுறை செய்தால் போதும். பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி, சிவபெருமான் நற்பலன்களை தொடர்ந்து வழங்கிடுவார்.images (30)

பரிகாரம் 3:

மேற்சொல்லப்பட்ட இரண்டு பரிகாரங்களும் கொஞ்சம் செலவு பிடிக்கும் என்பதால், இதைச் செய்ய முடியாத ஏழைகளுக்கும் வழி இருக்கிறது. அமாவாசை தினத்தன்று, மாலை 5 மணிக்கு சிவன் கோவிலுக்கு சென்று, ஒன்பது சுற்றுகள் சுற்றிவந்து வணங்கிவரவேண்டும். இதுபோல ஒன்பது அமாவாசை தினங்களில் சுற்றிவந்து வணங்கினால், சிவபெருமான் அருள்பாலித்து, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்குவார். ஆனால், வசதிபடைத்தவர்களும், ஓரளவு வசதி படைத்தவர்களும், இந்த பரிகாரத்தை மேற்கொண்டால், பலன் கிடைக்காது. ஏழைகள் மட்டுமே இவ்விதம் செலவில்லாத பரிகாரத்தை செய்யலாம். வசதி படைத்தவர்கள், தங்கள் வசதிக்கேற்ப தீபாராதனைகளும் அர்ச்சனைகளும் செய்துதான் வழிபட்டு பரிகாரம் செய்யவேண்டும். ஏனெனில், ஏழைகளை மட்டுமே சிவபெருமான் வறுமைப்பிடியிலிருந்து மீள வைப்பார். எனவே அவரவர் வசதிக்கேற்ப பரிகாரம் செய்து வழிபாடு செய்தால், இந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடலாம். குடும்பத்தில் எல்லோருக்கும் சுபிட்சம் உண்டாகும். வீட்டில் வறுமை அகன்றோடிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *