images (56)

மஹா பெரியவா சொன்ன எளிதான தர்மங்கள்

ஸினிமா…இன்னிக்கி…ஸமுதாயத்ல உண்டாக்கற.. சீரழிவு ஜாஸ்தி! ஸினிமாவை… தங்களோட பொழைப்பா… கொண்டு, தங்களை… ரொம்பவே expose பண்ணிண்டுட்டதுனால, இன்னிக்கி…. பொண்களோட… இயற்கையான நாணமும், நல்ல பண்புகளும் இல்லாதது ரொம்ப வருத்தமா இருக்கு. Atomic Power மாதிரி, ஸினிமாக்கள் நல்லதுக்கும், ஆனால், அதிகமா… கெட்டதுக்கும் பயன்படறது.

தங்களுக்குண்டான குடும்ப கார்யங்களை, கடமைகளை விட்டுட்டு, social service-னு கெளம்பக் கூடாது.

பொண்கள் வீட்டோட இருந்தா… ‘அடஞ்சு கெடக்கறது’ ன்னு அர்த்தமில்ல! பொண்கள் வீட்ல அடைபட்டிருக்கணுமே-ன்னு நெனச்சு, பாதுகாப்பில்லாத எடங்கள்ள வேலை செஞ்சு, திண்டாடறதை விட, நம்ம ஶாஸ்த்ரங்கள், புராணங்கள், ஸம்ஸ்க்ருதம் இதுகள… படிக்கறதையும், அப்படிப் படிச்சத… கொழந்தேளுக்கும், மத்தவாளுக்கும் மனஸ்ல.. ஸதா உருவேத்தி, அவாள… நல்ல ப்ரஜைகளா… உருவாக்கறதே… பொண்களுக்கு லக்ஷணம். வாஸ்தவத்ல, ஸமுதாயத்துக்கு.. பொண்களோட இந்தப் பங்கு.. ரொம்ப பெருஸு!

‘வீட்ல… புருஷனுக்கு அடங்கி இருக்கறது முடியாது! பணத்துக்கு, அவன்ட்ட கையேந்திண்டு நிக்க முடியாது! பெண் ஸ்வதந்த்ரம் வேணும்! ‘…ன்னு…கொடி தூக்கறவா, அதுனால, ஏதோ வேலைக்கு போறா! அப்டி வேலைக்கு போற வழில…பஸ்ஸுல, ட்ரெயின்ல….எத்தன கஷ்டங்களுக்கும், அவமானத்துக்கும் ஆளாறதோட, வேலை செய்யற எடத்துலயும். மேலதிகாரிகள், ஸக ஊழியர்கள்னு, ஆயிரம் பேருக்கு அடங்கித்தான் வேலை செய்ய வேண்டியிருக்கு!

ஒரு புருஷனுக்கு அடங்கி வாழ்கை நடத்த முடியாதவா….. ஆயிரம் புருஷாளுக்கு அடங்கி, திட்டு வாங்கி, பயந்து..அங்க இங்க ஓடி…. கொழந்தேளையும் ஸெரியா கூட இருந்து பாத்துக்க முடியாம, கடஸீல…. வாழ்க்கை முடியறப்போ…. யோஜிச்சுப் பாத்தா….. பணம் ஒண்ணுதான் அவாளுக்கு ப்ரதானமா இருந்திருக்கறதும், ஆனா…. வாழ்க்கைல….அழகான, நல்லதான… எத்தனை விஷயங்களை, அவா கோட்டை விட்டிருக்கறதும் புரியவரும். அப்போ…. என்ன ப்ரயோஜனம்?…

பொண் கொழந்தைகள், கன்யா பொண்கள், ஸுமங்கலிகள்…இவாள்ளாம்… எப்பவுமே நெத்திக்கு இட்டுக்கணும, பாழ் நெத்தியா… இருக்கக் கூடாது.

ஸுமங்கலிகள்… நெத்தி வகிடுலயும், நெத்திலயும்… குங்குமம் வெச்சுக்கணும்.

கருப்பு பொட்டு… அமங்கலத்தை தரும். கண்ணுக்குத் தெரியாமல் பொட்டு வெச்சுக்கறதும், பொட்டு வெச்சுக்காம இருக்கறதும் ஒண்ணுதான்.

பொண்களுக்கு… நகைகள், fashion-க்காக இல்ல! கன்யாவா இருக்கறச்சே… அவளுக்கும், கல்யாணமானதும் அவளோட புருஷனுக்கும், அவை… ரக்ஷைகள்.

திருமாங்கல்யத்தை.. மஞ்சக்கயத்துலதான் கோர்த்துக்கணும். தெனோமும்.. மஞ்சள் தேய்ச்சுக் குளிச்சா… அழுக்கோ, பிஸுக்கோ அதுல ஏறாது.

காதுல… தோடு பெருஸா இருந்தா, அவ புருஷனுக்கு ஆயுஸ் ஜாஸ்தி! அம்பாளோட தாடங்க மஹிமையாலதான், ஹாலாஹல விஷம் கூட, பரமேஶ்வரனை ஒண்ணும் பண்ணல!

கழுத்துல கருகமணியும், கைகள்ள, கண்ணாடி வளையலும், அவஸ்யம்.

ஸ்வர்ணம்[தங்கம்] ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மி! பொண்கள் கால்ல.. போட்டுக்கற கொலுஸு, மெட்டி இதையெல்லாம்…. தங்கத்ல பண்ணி, கால்ல போட்டுக்க கூடாது. அம்பாளோட பாதங்கள்ள மட்டுந்தான்… தங்கத்தை போடணும்.

வெள்ளிக்கெழமை… கண்ணாடி வளையல் இருக்கற பொட்டி… காலியா.. இருக்கக்கூடாது.

கன்யாப் பொண்களும், ஸுமங்கலிகளும் தலை முடியை வெட்டிக்கக் கூடாது.

இப்போ… ஜீன்ஸ் பான்ட் போட்டுக்கறதுக்காக, திருமாங்கல்யத்தையே கழட்டி வெச்சிட்டு போற அளவுக்கு… பொண்கள் ‘முன்னேறியிருக்கா!’. பொண்கள் செய்யற.. இந்த மாதிரி, பல ஆகாத கார்யங்களாலும், ‘பணத்தையும், ஸ்டேடஸ்ஸையும், வெளிநாட்டு மோஹத்தையும்’ மட்டுமே அடிப்படையா வெச்சிண்டு, பெத்த கொழந்தேள்-லேர்ந்து, புருஷன், மாமனார், மாமியார் அத்தனை பேரையும் ஒதுக்கிவிட்டு, “தான், தன் ஸுகம் “ன்னு மட்டுமே வாழறதுனால, அப்படிப்பட்ட பொண்களை, அவாளோட பெத்தவாளும் எடுத்துச் சொல்லி திருத்தாம, encourage வேற பண்றதாலும், இன்னிக்கி….பல பொண்களோட கல்யாண வாழ்க்கை, நிம்மதியில்லாமலும், புருஷன், ஸொந்தக்காரா எல்லார்கிட்டேர்ந்தும் பிரிஞ்சு… அமங்கலமா.. இருக்கறதை…கண்கூடா… பாக்கறோம்.

பொண்களுக்கு வைதவ்யம் [கணவனை இழப்பது]…ங்கறது… பகவான் குடுத்த ஸன்யாஸம். அது ஶாபமில்லை!

பொண்களுக்கு முடிஞ்சவரைக்கும்… கொறஞ்ச வயஸ்லேயே கல்யாணம் செஞ்சுடணும். அப்போதான் புகுந்த வீட்ல இருக்கறவாளை புரிஞ்சிண்டு, அவாளுக்கு அனுஸரணையா நல்லபடி வாழ முடியும்.

பொண்கள்… காயத்ரீ மந்த்ரத்தையோ, வேத மந்த்ரங்களையோ, சொல்லக் கூடாது. அதெல்லாம் மொறையா… பூணூல் போட்டுண்டவா… மட்டுந்தான் சொல்லணும். பிள்ளைக் கொழந்தைகளே கூட, பூணூல் போட்டுக்கறதுக்கு முன்னாடி, வேத பாடம் சொல்லக் கூடாது.

பொண்களுக்கு… லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தர்யலஹரி, விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, மாதிரி ஸ்லோகங்களே ஸ்ரேஷ்டம். பொண்கள்… விஷ்ணு ஸஹஸ்ரநாமம் சொல்லக்கூடாது.

பொண்கள் எப்பவுமே… பொடவைதான் கட்டிக்கணும். புருஷாளே.. கால் தெரியும்படி ட்ராயர்-ல்லாம் போட்டுக்காம… வேஷ்டி கட்டிக்கணும்-ங்கறச்சே… பொண்கள் இப்போல்லாம்… வீட்டுலயும், வெளிலயும் ‘ஸ்வதந்த்ரம்’ன்னு போட்டுண்டு போற dress-கள்…. புருஷாளவிட….ரொம்ப மோசமா இருக்கு.

கோவிலுக்கோ, மஹான்களை தர்ஶனம் பண்ணப் போறச்சயோ…கட்டாயமா.. ஆண்கள்-வேஷ்டியும், பொண்கள்-பொடவையும், பொண்கொழந்தைகள்-பாவாடை சட்டையும், கன்யாபொண்கள்- தாவணியும்… கட்டிண்டுதான் போகணும். அதையும், கௌரவமான மொறைல போட்டுக்கணும். எப்பவுமே… பொறத்தியாரோட கவனத்தை திசை திருப்பும்படியான dress-களையோ, நகைகளையோ போட்டுண்டு போகக் கூடாது.

பொண்கள் வீட்டுலயும், வெளிலயும்.. தலையை விரிச்சுப் போட்டுண்டு இருக்கக் கூடாது. எழவு [ஸாவு] விழுந்த வீட்டில்தான், தலையை விரிச்சுப் போட்டுண்டிருப்பா. பொண்கள், தலையை முடிஞ்சுக்காம, விரிச்சுப் போட்டுண்டு இருக்கற வீடுகள்ள….தரித்ரம் தாண்டவமாடும். லக்ஷ்மீகரம் போய்டும்! ‘லக்ஷ்மீகரம்’-னா…வெறும் பணம் காஸு மட்டுமில்ல! மனஸ்ல, ஸந்தோஷம், நல்ல குடும்ப வாழ்க்கை, குடும்பத்ல அமைதி, நிம்மதி…

இதெல்லாம்தான் உண்மையான லக்ஷ்மீகரம்.

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>