images (84)

நாளை என்பதே நமக்கு உறுதியில்லை… நாளும் அது புரிவதில்லை

ஆறுதலே கூற முடியாத
சில கஷ்டங்களுக்கு
நிச்சயமாக அழுகை
ஒரு மருந்தாக இருக்கும்….

பணக்காரனா பல கவலைகளோட வாழ்றத விட
பைத்தியகாரனா எதோ ஒரு நினைவோட வாழ்ந்துட்டு போய்டலாம்.

இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்…
ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை…!

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் …

நரகம் என்னவோ இந்த வாழ்க்கையை விட வலித்து விட போவது இல்லை என்றே தோன்றுகிறது ….

நம்மில் பெரும்பாலானோர்,
சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட …,
இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் ….

வாழும் நாட்களில் சந்தோஷத்தையும்,
மனஅமைதியையும் தேடுங்கள் …
மனிதனுடைய வாழ்நாள் தேவைகள்,
ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை

இனி எதற்கும் “ஏன்” என கேள்வி கேக்காதே என்று சொன்னால் ….
அதற்கும் …
“ஏன்” என்று தான் கேட்பாள் இந்த பெண் .

அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே …
இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்?

சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது …
15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது.

கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது!

வேலை இல்லாதவனின் பகலும்,
நோயாளியின் இரவும் மிக நீளமானவை.

வாழ்க்கை மிகச் சிறியது என்பதால்… அன்பை அதிகமாகவும், கோபங்களைக் கஞ்சத்தனமாகவும், மன்னித்தல்களை விரைவாகவும் வெளிப்படுத்த கற்றுக் கொள்ளுங்கள்…

மனக்காயங்களுக்கான மருந்தை கண்டுபிடித்தால்

அவன் தான் உலகின் பெரிய பணக்காரன் ஆவான் …

எத்தனை காலம் கடந்தால் என்ன…. சில நினைவுகளுக்கு நரை விழுவதே இல்லை…..

இழப்பதற்கு மட்டும் வருந்த வேண்டுமெனில்,
வாழ் நாட்கள் போதாது ….
ஏனெனில் …
இந்த வாழ்க்கையில் இழப்புகள் தான் ஏராளம் …

பூனையை விட சிங்கம் வலிமையானது என்று
எலிகள் ஒரு போதும் ஒத்துக் கொள்ளாது.

தவறான வழியில் வெல்பவனை வாழ்த்தியும், நேர்மையான வழியில் சென்று தோற்பவனை தாழ்த்தியும் பேசும் சமுதாயம்தான்
குற்றங்களுக்கு காரணம்!

சிரித்துக்_கொண்டே உன்னோடிருந்து உனை_சீரழிக்கும்
துரோகியை_விட …

 முறைத்துக்_கொண்டே  உன் முன்னிருக்கும்
 எதிரி_மேலானவன் !…..

அவ்வளவு
எளிதாக யாரிடமும் இருந்து
பிரிந்து விட
இயலவில்லை….
பிரிவு என்ற பெயரில்
கொஞ்சம்
ஒதுங்கி மட்டுமே இருக்க முடிகிறது

உனக்காக… தன் மீதான
நியாயமான வாதத்தைக்
கூட நிறுத்திக் கொள்ளும்
பெண் கிடைத்தால்
ஒருபோதும் இழந்து விடாதே..

அலைகளில் கால்களை
நனைக்கும் சுகம்,
கப்பலில் கடல்
நடுவில்
பயணப்படும்போது
கிடைப்பதில்லை…
பேரின்பம் வேண்டாம்…
சிறுசிறு சந்தோஷங்கள்
போதும் வாழ்வை அனுபவிக்க………

நூறு பேரின் வாயை
மூட முயற்சிப்பதை
விட நம் காதுகளை
மூடிக்கொள்வது
சிறந்தது……

வாழ்க்கையில் கஷ்டங்களும், கவலைகளும் நமக்கு மட்டும் தான் அதிகமா வருதுன்னு நினைக்கிறவங்க அனைவருமே மிகப்பெரிய முட்டாள்கள்..

 புன்னகை பிரச்சினைகள் “வருவதை தள்ளி போடும்..!!
 மெளனம் “பிரச்சினைகளே வராமல் தடுக்கும்..!
எல்லா “பிரச்சினைகளுக்
கும் இந்த வாய் காரணம்..!!!

அறிவாளியை விலை கொடுத்து வாங்கி விடலாம்.
உணர்ச்சி உள்ள மனிதனையும்,,அன்பான மனிதர்களையும் விலை கொடுத்து வாங்க
முடியாது…..

வாழ்வோடு போராடிச்
சாவதிலும்
சாவோடு போராடி
வாழ்வதிலுமே…
வாழ்க்கை முடிந்துவிடுகிறது…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>