13015451_1694923844103587_1861851806541254235_n

மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம்

பூமியிலிருந்து ஆக்ஸிஜன் நீங்கி விட்டால்…?

ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னவாகும்?

‘இப்ப எதுக்கு இப்படி ஒரு விபரீதமான ஆசை ‘ன்னு கேக்கறீங்களா… ?

காரணம் இருக்கு அதை கடைசியா சொல்றேன் இப்ப விடை சொல்லுங்க பாஸ்…

“இதென்ன கேள்வி எல்லா உயிரினங்களும் அழிந்து போகும்.” என்கிறீர்களா…?

சரி…நான் சொல்வது வெறும் ஐந்து நொடிகளுக்கு மட்டும் என்றால்?

‘அப்படி என்றால் ரொம்ப பயப்படத் தேவை இல்லை. என்ன …எல்லோரும் கூவத்தை கடந்து போறா மாதிரி ஒரு ஐந்து நொடி மூச்சை இழுத்து பிடித்து கொண்டால் முடிந்தது பெரிசா ஆபத்து ஒன்னும் இல்லை.’ என்பது உங்கள் பதிலாக இருக்குமேயானால்…

இனி சொல்லப்போகும் அனைத்தும் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

கருப்பு வானம் :

வானம் பகல் நேரத்தில் இவ்வளவு ஒளியுடன் பிரகாசமாக காட்சி அளிப்பதற்கு காரணம் ஒளிச்சிதறல் அதாவது ஒளியானது வளிமண்டல ஆக்சிஜன் மூலக்கூறு மற்றும் தூசுகளில் பட்டு மீண்டும் மீண்டும் எதிரொளிப்பது…
இப்போது ஆக்சிஜனை நீங்கள் நீக்கி விட்டதால் வானம் கருகும். இருட்டாக, கருப்பாக ஆகிடும்… மேலும் இப்போது பார்ப்பதைப் போல அணைத்து இடத்திலும் வெளிச்சமாக இல்லாமல் யாரோ LED பல்ப் போட்டாற்போல் வெளிச்சம், குவிக்கப்பட்ட நிலை யில் கிடைக்கும்.(சும்மாவே பத்தரை மணிக்கு எந்திரிப்பவங்க இன்னும் விடியலை போலன்னு திரும்ப தூங்கப்போக வேண்டியதுதான்.)

இடியும் கட்டிடங்கள் :

நீங்கள் கண்ணால் பார்க்கக் கூடிய கான்க்ரீட்டால் ஆன எந்த கட்டிடமும் … அது வீடோ… பாலமோ… எல்லாமே மண்ணால் பண்ணி வைத்தது போல பொல பொலவென உதிர்ந்து போகும். காரணம் கான்க்ரீட் கலவையில் முக்கியப் பிணைப்பு ஆக்சிஜன் தான். (சும்மாவே நம்மூர்ல அரசியல் வாதிங்க கட்டற கட்டிடம், பாலம் எல்லாம் அப்பப்போ ஆக்சிஜன் இல்லாத மாதிரி விழுந்து கொண்டுதான் இருக்கிறது.)

ஆவியாகும் கடல் :

தண்ணீர் என்பது ஹைட்ரஜனும் ஆக்சிஜனும் கலந்த கலவைன்னு நமக்குத் தெரியும்… எனவே அதில் உள்ள ஆக்சிஜனை மட்டும் நீக்கி விட்டால் மீதி இருப்பது ஹைட்ரஜன்… அதாவது வாயு.
அதுவும் அது எப்படிப் பட்ட வாயு…? பறக்கும் பலூன் ஏன் பறக்குது? ஆம், அதே தான். அதுக்குள்ள இருப்பது மிகவும் லேசான தனிமம் ஆகிய ஹைட்ரஜன். எனவே மொத்தக் கடலும் ..ஏரி ..குளம் எல்லா நீர் நிலையும் ஆவியாகி வானதுக்கு போய்டும் . (மேட்டர் தெரியாம மெரினா போனவன் கடல் காணாம போயிட்டதுன்னு கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்)

நிற்கமுடியா நிலம் :

பூமியின் மேலடுக்கின் கட்டுமானத்தில் ஆக்சிஜன் முக்கிய பங்கு வகிப்பதால் அது முழுவதும் கெட்டிப்பட்டு நிற்கும் தன்மை போய்… புதை மணலில் நிற்பதை போல உள் வாங்கிக் கொள்ளும். நிற்க நிலம் கிடைக்காது… (நிற்க நேரம் இல்லைன்னா சமாளிக்கலாம். நிற்கவே நிலமே இல்லைன்னா… என்ன பண்றது?)

சுடும் சூரியன்:

குறிப்பா சூரியன் சுட்டெரிக்கும்.
இதென்னப்பா ஆச்சர்யம்? அது தினம் சுட்டுக்கிட்டு தானே இருக்கு என்று நினைக்காதீர்கள் நான் சொல்வது அடுப்பில் வடை சுடுவதைப்போல…..
சூரியனில் உள்ள புறஊதாவை ஓசோன் (O3) தான் வடி கட்டி அனுப்புகிறது. அதில் உள்ள ஆக்சிஜன் நீக்கிவிட்டால் அதன் பின் சூரிய ஒளியில் நிற்கும் யாவரும் தந்தூரி சிக்கன் தான்.

உள் காது கோவிந்தா :

நம்ம காதுக்குள்ள ஒரு நிலை நிறுத்தும் அமைப்பு ஒன்று இருக்கு. அதன் வேலை நம்மை சுற்றி அழுத்த மாறுபாடு ஏற்பட்டால் அதனால் நாம் பாதிக்கப் படாமல் இருக்க, நம்மை சமன் நிலையில் வைப்பதற்காக அழுத்த மாறுபாட்டைப் பராமரிப்பது. ஆனால் ஆக்சிஜன் நீக்கப் பட்டதால் வளிமண்டலக் காற்று அளவு 21 சதம் திடீரென குறைந்து போய்… அழுத்தம் கணிச மான அளவில் குறைந்து விடுவதால் மிகப்பெரிய அழுத்த மாறுபாட்டைச் சமாளிக்க முடியாமல் அனைவரின் உள் காதுகளும் வெடித்துச் சிதறும்…
ஹலோ நான் சொல்றது கேக்குதா… ஹலோ… ஹலோ…??

இயங்காத இன்ஜின்கள்:

ஆட்டோ தொடங்கி ஆட்டோமேட்டிக் விமானம் வரை…
ரோடு ரோலர் இன்ஜின் முதல் ராக்கெட் இன்ஜின் வரை… எந்த எரிபொருளில் இயங்கும் இன்ஜினானாலும் அதில் எரிக்கப்படுவது ஆக்சிஜன்தான் என்பதால் நாம் திட்டமிட்ட அந்த ஐந்து வினாடிகளில் பறக்கும் விமானம், ஓடும் கார், பைக் எதுவானாலும் அங்கங்கே இயங்காமல் நிற்கும். (தலைக்கு மேல் விமானம் பறந்து கொண்டிருந்தால் கொஞ்சம் தள்ளி நின்று கொள்வது தலைக்கு நல்லது.)

ஒட்டிக்கொள்ளும் உலோகங்கள் :

குளிர் வெல்டிங் முறை பற்றி உங்களுக்கு தெரியுமா? அதில் இரண்டு உலோகங்களுக்கு இடையில் உள்ள காற்றை நீக்கி வெற்றிடம் உண்டு பண்ணுவார்கள் அப்படிச் செய்தால் அந்த உலோகம் வெல்ட் பண்ணாமலேயே வெல்ட் பண்ணது போல ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும்.
சாதாரணமாக உலோகங்கள் அப்படி ஒட்டிக்கொள்ளாமல் இருக்கக் காரணம் அவைகளின் மேலே ஆக்சிடைசின் பூச்சு இயற்கையாகவே ஒரு மேல் அடுக்கு போல பரவி இருப்பது தான். அதில் மேற் சொன்ன ஆக்சிஜன் நீக்கம் நடந்தால் உலோகங்கள் தானாகவே ஒன்றோடு ஒன்று வெல்ட் பண்ணிக்கொள்ளும்.

இப்ப சொல்லுங்க…
பூமியில் ஐந்து நொடி… ஐந்தே ஐந்து நொடி… பிராணவாயு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா…?
நிச்சயமாக முடியாது அல்லவா…
இதையெல்லாம் எதுக்கு சொல்கிறேன் என்றால்…..
அப்படிப் பட்ட பிராணவாயுவை… 100 தொழிற்சாலை உற்பத்தி பண்ண முடியாத ஆக்சிஜனை ஒரு மரம் உற்பத்தி பண்ண முடியும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>