இது அப்பாவை நேசிப்பவர்களுக்கானது கண்ணீர் இல்லாமல் வாசிக்கவும்.

ஆணழகன்
அப்பாவிற்கு_அழத்தெரியாது!!

குடும்பத்திற்காக மாடாய் உழைத்த போதும்!

பிள்ளைகளின் பசியாற்ற ஓடாய் தேய்ந்த போதும்!

என்னடா வாழ்க்கை இது என

ஒருநாளும்_அழுதிருக்கமாட்டார்!

 மனைவியை நெஞ்சில் சுமந்து!

 பிள்ளைகளை தோளில் சுமந்து!

குடும்ப பொறுப்புகளை தலையில் சுமந்து!

போகும் வழி தெரியாமல்
விழிபிதுங்கி நின்ற போதும்!

தான் கலங்கினால் குடும்பம் உடைந்துவிடும் என கல்லாய் நின்றவர்!

நாம்அவரைகல்லெனவே #நினைத்துவிட்டோம்!

அம்மாவிடம் ஒட்டிக்கொள்வோம்!
 அப்பாவிடம் எட்டி நிற்போம்!
 முகம் கொடுத்து பேசிய வார்த்தைகள்
சொற்பம் என்போம்!

ஆனால்,
தோல்வியில் துவளும் போது பிடித்துகொள்ள அப்பாவின் கைகளை தான் முதலில் தேடுவோம்!

நம்மை அள்ளி அணைத்து முத்தமிட்டதில்லை என்றாலும்!

தள்ளி நின்று உணர்ச்சி வெள்ளத்தில் ததும்பும்ஜீவன்அது!

 நாம் திண்ணும் சோறும்!
 உடுத்தும் உடையும்!
 படித்த படிப்பும்!

அப்பாவின் வேர்வையில்தான் என
ஒருநாளும் அவர் சொல்லிக்காட்டிதில்லை!

நேரில் நம்மிடம் நாலு வார்த்தை கூட பேசாதவர்!

ஊர்முழுக்க நம்மை பற்றிதான் பெருமையாக பேசி திரிவார்!

அம்மாவின் பாசத்தை அங்கலாய்க்கும் நாம்!

#அப்பாவின்பாசத்தைஉணரக்கூட #இல்லையோ!

⚽ நமக்கு மீசை முளைத்தால் அவர்
குதூகளிப்பார்!

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால்
அவரே உயரமானதாக உணர்வார்!

வாழ்க்கையில் நம்மை முன்னே நடக்கவிட்டு பின்னே நின்று பெருமிதத்துடன் ரசிப்பார்!

நம் வாழ்க்கையின் பின்னால்…

அப்பா எப்போதுமேஇருப்பார்!

அப்பாவிற்கு பாசத்தை வெளிபடுத்த
தெரியாது!
 அப்பாவிற்கு கொஞ்ச தெரியாது!
அப்பாவிற்கு போலியாய் இருக்க தெரியாது!
 அப்பாவிற்கு தன் கஷ்டத்தை வெளிக்காட்ட தெரியாது!
 அப்பாவிற்கு தனக்காக எதையும் சேர்த்து வைத்துகொள்ள தெரியாது!

அந்த_பைத்தியத்திற்கு
அழவும்_தெரியாது!

வளர்த்த கெடா மாரில் பாய்ந்த போதும்!
ஒருவேளை சோற்றுக்காக மருமகளுக்கு வேலைக்காரனாய் மாறிப்போன போதும்!
முதியோர் இல்லத்திற்கு தூக்கி வீசப்பட்ட போதும்! அவர் அழுதவரில்லை!

நம்சந்தோசத்திற்காகவேஎதையும் தாங்கும்ஆன்மாஅவர்!

பாசமோ!
மன்னிப்போ!
அழுகையோ!
உணர்வுகளை அவரிடம் உடனே வெளிப்படுத்தி விடுங்கள்!

ஒருவேளை உங்கள் நண்பனின் அப்பா
மரணமோ!
உங்கள் அப்பா வயதுடைய யாரோ
ஒருவரின் மரணமோ!

உங்களை புரட்டி போட்டு!
அவர் பாசம் புரிந்து!
அப்பாவை தேடி ஓடிரும்போது!

வீட்டில் அப்பா…
சிரித்துக்கொண்டிருக்கலாம்…
புகைப்படத்தில்!!

பாவம்_அவருக்குதான்..
அழத்தெரியாதே!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *