வீட்டுப்பிரசவமும் பிறப்பு சான்றிதழும்

என் மனைவி கருவுற்ற நாள் முதல் எந்த போலிக் ஆசிட்,கால்சியம் போன்ற எந்த சத்து மாத்திரைகள் உண்ணாமலும். மாதா மாதம் ஸ்கேன் எடுத்து கருவின் வளர்ச்சியை பரிசோதனை ஏதும் செய்யாமல்

பிடித்த உணவுகளை பசிக்கும் போது மட்டும் உண்டு.10 மணிக்குள் உறங்கும் பழகத்தை உருவாக்கிக்கொண்டும்

முக்கியமாக கர்ப்பமாக இருப்பதும் பிரசவமும் நோய் அல்ல அது ஒர் இயல்பான இனிமையான இயற்கை நிகழ்வு என்பதை உள்ளத்தில் உணர்த்து கொண்டதால் இதற்கு மருத்துவம் தேவையில்லை என்பதில் தெளிவானோம்.

இந்த எளிய இயற்கை வாழ்வியலை வாழந்தால் போதும்.குழந்தை தாயின் வயிற்றில் முழுமை அடைந்ததும் நிச்சயம் வெளிவரும் இதில் கடுகளவும் சந்தேகம் கொள்ளவில்லை.

இங்கு சிசேரியன் மாதா மாதம் ஸேகன் பார்த்து, மருந்து மாத்திரை எடுத்தவர்களுக்குத்தான் ஏற்படுகிறது என்பதால் எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை மாறாக ஆவலாகதான் காத்திருந்தோம் அந்த சுகபிரசவ நாளுக்காய்

அந்த நாளும் வந்தது 19-08-2017 அன்று எந்த முயற்சியும் பயிற்சியும் இல்லாமல் எங்களின் இல்லத்தில் ஒர் மொட்டு மலரவதை போல், கை கால் முளைத்த மென்மையான மின்னலைப்போல் என் கைகளில் என் மகனை பெற்று நான் தந்தையான தருணத்தை நான் உணர்ந்த அளவிற்கு உங்களுக்கு உணர்த்த முடியவில்லை.

முதன்முதலான் என் மகன் விழி திறந்த அந்த கணபொழுதை எந்த மொழியிலும் விளக்கமுடியாது நண்பர்களே.

என் மகன் பிறந்து அழுத உடன் அவனுக்கு தாய்பால் எனும் அமுதம் தந்தோம். ஆனால் மருத்துவமனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் முதலில் தடுப்புசி தருவதாகதான் செய்தி.அடுத்துதான் தாய்பாலாம். இன்னும் சில குழந்தைகளை தாயிடமிருந்து பிரித்து இன்குபேட்டரிலும் வைக்கப்படுகிறது எடை குறைவு,குறைபிரசவம் என்னும் காரணங்களால்.

இந்த காலத்தில் வீட்டில் பிரசவமா என பயமுரித்தியர்களெல்லாம் சுகபிரவத்திற்கு பிறகு அந்த காலத்தில் இப்படிதான் என் பாட்டிக்கு 9 பிள்ளைகள் வீட்டில்தான் எனவும்.என் அம்மா வீட்டில் குழந்தைபெற்றுவிட்டு இரவு உணவை அவர்களே எங்களுக்கு சமைத்தார்கள் என பல அனுபவங்களை கேட்டேன்.

என்னிடம் சிகிச்சைக்கு வரும் பல ஹீலிகளும் சார் நான் கூட வீட்டில்தான் பிறந்தேன் என்பார்கள்.

வீட்டில் பிறந்த என் மகனுக்கு பிறப்பு சான்றிதழ் கோரி விண்ணப்பித்தேன் நான் தான் என் மனைவிக்கு பிரசவம் பார்த்தேன் என ஒர் கடிதம்.மேலும் பக்கத்துவீடு எதிர்வீடு என நான்கு பேரிடம் சாட்சி கடிதம் வாங்கி தந்து காத்திருந்தேன்.

மாநகராட்சியிலிருந்து வீட்டிற்கு வந்து விசாரித்தார்கள் .வீட்டில் பிரசவம் பாதுகாப்பா என்றார்கள் எங்களின் அக்குபங்சர் மரபு மருத்துவத்தின் அடிபடையில் இதுதான் எங்களுக்கு மிக பாதுகாப்பும் எளிமையானதும் ஆகுமென கூறியதும் ஆச்சரியத்துடன் ஏற்றுக்கொண்டார்கள்

சுகாதார அலுவலரின் சீரிய பணியால் குழந்தை வீட்டில் பிறந்தது என்று “பிறப்பு சான்றிதழ்”
24-10-2017 அன்று மாநகராட்சி இனையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து பெற்றேன்.

இந்த தகவலை நான் பகிர காரணம் வீட்டுப்பிரவமும்,பிறப்புசான்றிதழும் எளிமையானவைதான் நாம் பொறுமையாக இருந்தால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *