மகிழ்ச்சி

இன்று நம்மில் பலரது நிலைமையை  இது.

“நவீன வசதிகளே சந்தோஷம்” என்று
அந்த மாய உலகின் வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்காக இன்றைய நம் சந்தோஷங்களை இழந்து கொண்டிருக்கிறோம்.

குடும்பத்துடன் வெளியே செல்வது,

பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுவது,

பிடித்த புத்தகம் படிப்பது,

பிடித்த படம் பார்ப்பது,

பிடித்த கோவிலுக்கு போவது,

பிடித்த உடை உடுத்துவது,

பிடித்த உணவு உண்பது

என்று எல்லா சந்தோஷ சிறகுகளையும் ஒவ்வொன்றாக வெட்டி வெட்டி வீசுகிறோம்.
கடைசியில் அந்த வசதிகளை அனுபவிக்கும் ஒரு நிலை வரும்போது நரை கூடி, திரை வந்து உடலும் மனசும் தளர்ந்து போகிறது.

எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.“மகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை. நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் இருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து வாழ்வோம்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *