நம்மள நாமே பார்ப்போமே 1

 ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 1

சங்கல்பம்  நமக்கென்று இருக்கக் கூடிய அடையாளங்கள் நாம் வசிக்கக்கூடிய இடம், நாம் அன்றாடம் செய்யக்கூடிய காரியங்களில் துணையாக இருக்கக் கூடிய குரு, அது போக இருக்கக்கூடிய குறியீடுகள்,  குறியீடுகள் என்பது, இன்னைக்கு என்ன கிழமை? ஞாயிறு அடுத்தது, இன்றைக்கு என்ன திதி? பிரதமை, என்ன நட்சத்திரம், அவிட்டம்,கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம், இந்த அஞ்சும் ஒவ்வொரு நாளும் விழித்தவுடன் நமக்குத் தெரியனும்.  ஏன்னா? நாள் என்பது பிருதிவி, திதி என்பது அப்பு, நட்சத்திரம் என்பது தேயு, இவைகளை சொல்லி இந்த செயலை நான் இந்த நிலையில் ஆரம்பித்து, நல்லபடியாக முடிக்கனும் என்கிற விஷயத்தை தெளிவு படுத்துவது சங்கல்பம்.

சங்கல்பம் இல்லாத எதுவுமே நடைமுறைக்கு வராது. அப்போ இன்றைக்கு நாம் ஒரு கிளாஸ் அப்படின்னு சொல்லீட்டு  இன்றைக்கு நாம தொடர்பு கொண்டியிருக்கிறோம். இந்த வகுப்பாகப்பட்டது தொடர்ந்து நடக்கனும். இந்த வகுப்பாகப்பட்டது நடக்கறதுனாலே ஏற்படக்கூடிய பயனாகப்பட்டது எனக்கு முழுமையாக கிடைக்கனும். இந்த வகுப்பிலே இருக்கக்கூடிய தன்மைக்கு ஒப்பவாறு என்னுடைய தகுதியை எனக்கு நான் வளர்த்து  வதற்கு உண்டான வாய்ப்பு, சூழ்நிலை மனோபக்குவம் என்னிடம் நீங்காது இருக்கனும்.  இன்றைய நிலையில், இந்தச் சூழ்நிலையில் இதற்கு எல்லாமே அடி ஆதாரமாக இருப்பது,  குரு. இப்ப இங்கே இருக்கக்கூடிய எல்லோருமே இந்தத்துறையில் ஓரளவு பரிச்சயம் இருக்கின்ற காரணத்தினாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குரு இருப்பார்கள்.

அப்போ முதல்ல குரு வணக்கம்,

“குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவோ மஹேஸ்வரா,

குருசாஃஷாத்  பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீ குருவே நமஹ”,

இது ஆதி காலந்தொட்டே பெரியவர்கள், சாஸ்திரங்கள் நமக்கு சொல்லிக்கொடுத்தது.  இது குருவணக்கம் தெரிந்தவர்களுக்குப் பதிவான விஷயம். நாம் இங்கே கொஞ்சம் எளிமையாகவும், நம்முடைய மனத்தில் ஆழமாக பதியறதுக்காக இருக்கக்கூடிய நல்ல கருத்தான ஒரு கவிதையை சொல்லுகிறேன். மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். இதுவும்

ஒரு குரு வணக்கப்பாடல்

கண்களிலே ஒளியாகி

கருத்தினிலே பொருளாகி

எண்ணமதில் நினைவதுமாகி

இதயமதில் அன்பாகி

என்னாலே உருவாகி

உன்னுள்ளே நானாகி

என்னுள்ளே நீயாகி

என்னை நடத்தும் வழியாகி

இருக்கின்ற என் குருவின்

பொற்பாதங்களே சரணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *