நம்மள நாமே பார்ப்போமே 2

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 2

எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்.  அந்த சிரசிலே பிரதானம் கண். அதனாலேதான் அந்த குரு வணக்கத்துலே  ஆரம்பத்தில் “கண்களிலே ஒளியாகி” என்று ஆரம்பிக்கும். எந்த ஒரு பொருளையுமே நம்ம அவயத்திலிருந்து நாம தான் போய் பிடிக்கணும். நாம ஒரு பொருளை எடுக்கனும் என்றால் நடந்து போய் எடுக்கனும், ஆனால் கண் அப்படியில்லை இருந்த இடத்திலே இருந்து எத்தனை தூரம் வேண்டுமானாலும் பார்க்கலாம். எல்லாவற்றையுமே படம் பிடித்துக் காட்டும். அதற்கு அளவே இல்லை, இப்போ நாம்  ஆகாயத்தைப் பார்க்கிறோம், அதே நேரம் வானில் பறக்கக்கூடிய ஏரோ ப்ளானைப் பார்க்கிறோம், நட்சத்திரைத்தைப் பார்க்கிறோம்.  அதையெல்லாம் பார்க்க மட்டுமே முடியும் . நம் கண்களுடைய அளவு ஆகாயத்தைப் பார்க்கும் தூரம் போல் பூமியின் தூரத்தைப் பார்க்க முடியாது. அப்படீன்னா இருந்த இடத்திலிருந்து கண் அதை பிடிக்குது.

கண், உடம்புலே ஒரு சைதன்யத்தோட இருக்கிற ஒரு அவயமா நம்மனாலே ப்ரத்யக்ஷ மா உணரக்கூடிய ஒரு உறுப்பு. சுயமா ஒளியை கொடுக்கக்கூடிய ஒரு உறுப்பு நம்மகிட்டே இருக்குன்னா அது கண். வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும், வேதம், நமக்கு சொல்லி தந்திருக்கு. எந்த ஒரு பொருளுக்கு சைதன்யம் இருக்கிறதோ அந்தப் பொருளாகப்பட்டது ஒளிரும். இது இருந்து நிதர்சனம் அப்ப நம்ம உடம்புலே சைதன்யமா இருக்கக்கூடிய ஒரு வஸ்து ஒன்னு இருக்குன்னா அது கண்.அதாவது கண்ணால் பார்க்கப் படுகின்ற அனைத்துமே மனதால் கிரகிக்கப்படுகிறது.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *