நம்மள நாமே பார்ப்போமே 3

தன்னைத் தான் அறிய வேண்டும்.

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 3

இப்போ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு இலக்கு இருக்கும். ஆனால் அது அல்ல வாழ்க்கை ஆனால், எல்லோருக்கும் இருக்கக்கூடிய ஒரே ஒரு இலக்கு நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அடையக்கூடிய இடம், அப்படின்னு ஒன்று இருக்கன்னா நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடத்தை அடைவது மட்டுமே அது. நாம் தன்னைத் தான் அறிய வேண்டும்.

எங்கிருந்து வந்தோம் என்று சிந்தித்தோம் என்றால் இறை அனுக்கிரகம் பெற்ற அனைத்து நபர்கள் மூலமாகவும், ஆன்மீகத்தில் திளைத்து எல்லாவற்றையும் விட்டு, நிர்சிந்தையாக நின்று அந்த ஒரு பிரபஞ்சத்தினுடைய முழுபலத்தை சிந்தித்தவர்கள் நமக்குத் தந்திருக்கக்கூடிய ஒருவிஷயம்.

எது இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தியோ, அந்த சக்தியிடமிருந்து தான் நாம் வந்திருக்கிறோம்.  அப்படிங்கிறதுதான் அவங்க சொல்லியிருக்காங்க, அதை நம்மாலேயே உணர முடியாத, நம்ப முடியாத, இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையைத்தான், மாயை என்கின்ற ஒரு தன்மைங்கறது. அப்படீன்னு அவங்க நமக்கு சொல்லிக் கொடுத்திருக்காங்க. அப்ப அந்த மாயையிலிருந்து விலகுவதற்கும் நமது இலக்கினுடைய தன்மையிலிருந்து நாம் இயல்பாக பயணிப்பதற்கும், அந்த பயணத்தில் எந்த வித இடையூறும் இல்லாமலிருப்பதற்கும் உண்டான விஷயங்களை நாம் நமக்குள் கலந்து உரையாடி, நாம் தெளிவு பெற்று, நம்மைச் சார்ந்தவர்களையும் தெளிவு பட செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகின்ற அனைவரையும், தெளிவுபடுத்துவதற்கு இந்த கிளாஸ் ஒரு அஸ்திவாரமாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *