நம்மள நாமே பார்ப்போமே 4

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 4

இப்போ கண்கள் இருந்து பிரகாசமானது, கண்கள் இருந்து சைதன்யமிக்கது. (அழகு), கண்கள் சுயமாகவே சில விஷயங்களை ஆற்றக்கூடியது, அப்படிங்கறது நாம அடிப்படையிலே உணர்ந்தாலும், அந்தக் கண்களை இயக்குவிக்கக்கூடிய சக்தின்னு ஒன்னு வேண்டிய ஒரு விஷயம், ஆனால், எது இருக்கிறதோ அதன் மூலமே அதை உணருவதற்கு உண்டான சாத்தியக் கூறு இருக்கிறது. அப்படீங்கறதுனாலேயும் முதல்ல நாம  கண்களிலிருந்து ஆரம்பிக்கிறோம்.

சரி கண் அப்படீங்கறது எந்த ஒரு சூழ்நிலையையும், எதையும் மிக விரைவாக தன்னுள் ஈர்க்கும். அப்படி ஈர்த்துக் கொண்டது நேராமனதிற்குப்போகும்.  இப்போ, முதல்ல நாம் செய்ய வேண்டிய விஷயம் ஈர்ப்பு என்ற ஒன்று வந்து விட்டாலே நாம் நம்மை விட்டு வெளியே செல்கிறோம்னு அர்த்தம். ஈர்க்கக் கூடிய விஷயங்கள் எல்லாம் நல்லது அப்படீங்கற ஒரு கண்டிஷன் இருக்குன்னா அப்ப பிரச்சனை இல்லை. இது எல்லாவற்றையுமே ஈர்க்குங்கற கண்டிஷன் இருக்கறதுனாலே முதல்ல இது எதையுமே ஈர்க்க வேண்டாம் அப்படிங்கற ஒரு நிலைக்கு வருவோம். அப்ப என்ன பண்றோம், முதல்ல கண்ணை மூடறோம், கண்ணை மூடினவுடனேயே என்ன ஆகும்? அது பற்றக்கூடிய, அது பிடிக்கக்கூடிய வஸ்துக்கள் இல்லாமல் போய்விடும். சரி, முதல்ல அதை நிறுத்தறோம். கண்களை மூடினவுடனேயே கண்களுடைய வேலை முடிஞ்சுடுச்சு. ஆனா மனதினுடைய வேலை இங்கு ஆரம்பம் ஆகிறது.  அது பாட்டுக்கு ஓடத்தொடங்கும். ஆனா என்ன ஓடுனாலும் இந்தக் கண்ணுடைய துணை இல்லாத காரணத்துனாலே அது நின்று நிதானமா தட்டுத்தடுமாறி அப்படியே நடக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *