நம்மள நாமே பார்ப்போமே 5

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 5

சரி, இப்படிச் சிந்திப்பதற்கு ஒரு ஆரம்பம் எது என்று கேட்கிறோம், அப்படி என்றால் சிரசே (தலை) பிரதானம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்னு சொல்லியிருக்காங்க. ரைட் சிரசிலேயும் நல்ல நிலையிலேயே இருக்கக்கூடியது கண்கள்ன்னு சொல்லியிருக்காங்க, அந்தக் கண்ணையும் நாம இப்ப மூடிடறோம். சரி, மூடின பிறகு மனநிலையோட ஓட்டம் ஓடுதுங்கறது தெரியுது. இப்ப இந்த ஓடக்கூடியதை இருந்து ஒருமைப்படுத்தறதுக்கு உண்டானது என்னன்னு பார்த்தா உயர்ந்த நிலையில் இருக்கக் கூடிய வஸ்துக்களில் நாம நம்முடைய எண்ணத்தைச் செலுத்தினோம்ன்னா இந்த முகத்துலதான் நாம் எங்கேயாவது ஓரிடத்துலே இருந்து முதலில் செலுத்திப்பழகனும். அதுக்கு எந்த இடம் அப்படின்னு அவங்க சிந்தித்தபோது இரு கண்களுக்கு, மத்தியில் இருக்கக்கூடிய இடம்  பெரியவங்க இருந்து நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க. மூன்றாவது கண் என்று சொல்லக் கூடிய ‘த்ரி நேத்ரம்’ என்று சொல்லக்கூடிய விஷயமாகப்பட்டது எதுவோ அந்த இடத்திலிருந்து நாம் பிரயாணத்தை ஆரம்பிக்கறது, நல்லதுன்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. இந்த உலகத்திலேயே மிக முக்கியமான விஷயம் எது?     இந்த உலகத்தில் இதுதான் அப்படீன்னு சொல்லக் கூடியது எது? இந்த உலகத்திலேயே மதிக்க வேண்டிய ஆள் யார்? இப்படி கேட்கலாம் ஈஸியாக இருக்கும். இந்த உலகத்திலேயே மதிச்சே ஆகணும் வேற வழியே இல்லை, அப்படிங்கறதுக்கு, உரியவர் யார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *