நம்மள நாமே பார்ப்போமே 6

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 6

உரியவர் யாரென்ரால்   நான் .

இத்தனை நேரம் நான் பேசறேன், அப்படின்னா, நான் என்று ஒன்று இருக்கனும். அப்ப ஓவ்வொருத்தரும் மொதல்ல மதிக்கவேண்டியது யாரை? நானே மதிக்கப்படவேணடியது. ஆராதிக்கப்பட வேண்டியது, எப்போதும் கவனத்தில் வைத்திருக்க வேண்டியது  எது? நாம் அந்த நாம் என்கிற  விஷயம் அந்த நாம் என்பது இருந்து அல்லது நான் என்பது , எதால் குறிப்பிடப்படுகிறது  உடலால்   அப்போ இந்த உடம்புக்குன்னு ஒரு மரியாதை இருக்கு,  இந்த உடம்புக்கு உண்டான மரியாதை அப்படீங்கறதை  நாம் எப்படி செலுத்த முடியும்?

ஓரு கடினமான வேலைசெய்யும்போது அந்தக் கைக்கிட்டேயோ, அல்லது அந்த கால்கிட்டேயோ நீங்க  என்னைக்காச்சும் எனக்கு இதனால் இப்படியிருக்கு அதனாலே கொஞ்சம் சரி பண்ணிக்க. என்னதான் இருந்தாலும், எங்கூட இத்தனை வருஷமா இருந்திட்டே, உன்னைக் கஷ்டப் படுத்தறது எனக்கு வருத்தமாத்தான் இருக்கு, ஆனாலும் வேற வழியில்லை. அப்படின்னு என்னைக்காச்சும் சொல்லியிருக்கீங்களா?   அடுத்தவங்க காலை மிதிச்சதுக்கு நீங்க சாரி சொல்றீங்க  அடுத்தவங்க மிதிச்சதுக்கும் நீங்க சாரி சொல்றீங்க உங்க கால்கிட்டே ஒரு வாசற்படி தட்டின உடனே ஒரு சாரி சொல்லியிருக்கீங்களா? ஏமாந்துவிட்டேன்னு நீங்க என்னிக்காச்சும் உங்க கால் கிட்டே சொல்லியிருக்கீங்களா? இது ஒரு முட்டாள் தனமா, அல்லது ஹம்பக்கா தெரியும், அல்ல, இந்த உடல் என்பது நீ அல்ல அப்படீங்கறது   முதல்ல உங்களுக்குப் புரியனும். நீ என்பதும், நான் என்பதும், நாம் என்பதும் இந்த உடல் அல்ல அதையும் தாண்டி இருக்கக்கூடிய ஒரு வஸ்து .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *