நம்மள நாமே பார்ப்போமே 7

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 7

ஒரு  வீடு இடிஞ்சுதுன்னா அதை ரிப்பேர் பண்றோம், ஒரு வண்டி ரிப்பேர் ஆச்சுன்னா அதை சரி பண்றோம். அதே மாதிரி இந்த உடம்பு ரிப்பேர் ஆச்சுன்னாலும் சரி பண்ணனும். நல்லா கவனத்தில் கொண்டோம்னா, ஒரு வண்டிரிப்பேர் பண்ணும்போது  நாம் எந்த விதமான ஒரு பாதிப்பும் அடையறது கிடையாது, ஓரே ஒரு பாதிப்பு மட்டும் அடைவோம். என்னன்னா பில்லு அதிகமாகவரும் போது பைன்னாஸ் ரீதியா, உடலாகப் பட்டது நான் அல்ல அப்படீங்கற ஒரு சிந்தனை வரனும்,  உடம்புக்குள்ள விருந்தினரா இருக்க ஆன்மா  வந்து நுழைஞ்சிருக்கிறது  அப்போ வெளியே இருந்து எது உள்ளே வருகிறதோ அது  விருந்தினர், வெளியே இருந்து ஒரு ஆள் இந்த வீட்டுக்கு வந்தார் அப்படீன்னா யார் அது? விருந்தினர் இல்லையா? நாம் விருந்தினரா இருந்து, தொல்லைதரக்கூடிய விருந்தினரா இருக்கலாமா? இருக்கக்கூடாது.

நம்மளுடைய செயல்கள், செயல்பாடுகள் அந்த வீட்டுல இருக்கிறவங்களுக்கு  கஷ்டத்தை தரலாமா? தரக்கூடாது. அப்போ நம்மளுடைய மனம் என்கிற செயல் ஆகப்பட்டது இந்த உடலுக்கு எந்த விதத்திலும் ஊறு விளைவிப்பதாக எக்காரணத்தைக் கொண்டும் இருக்கக்கூடாது. அப்போ இந்த உடலை இருந்து முதல்ல நாம் என்ன பண்ணனும். ஒருவிடுதிக்கு (லாட்ஜ்) போறோம். அந்த விடுதியினுடைய முதலாளியிலிருந்து வேலை செய்யும் பையன் முதற்கொண்டு நம்மளுடைய தேவைகளை பூர்த்தி பண்ணக்கூடிய அந்த வேலையாள் முதற் கொண்டு நாம ஒரு 15 நாள் தங்குகிறோம் அப்படீன்னா நாம அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்கறதில்லையா? தெரிஞ்சு நம்மளுடைய தேவைகளை அவங்க கிட்டசொல்ல, அவங்களுடைய சில தேவைகளை நாம் பூர்த்தி பண்ண அந்த 15 நாள் வாழ்க்கையாகப்பட்டது, அந்த 15நாள் விஷயமாகப்பட்டது எந்த அளவுக்கு சந்தோஷமாகப்போகுது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *