நம்மள நாமே பார்ப்போமே 8

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 8

அதே மாதிரி நாம் வந்து இந்த இடத்திலே உக்காந்திருக்கக்கூடியதற்க்கும், நமக்கும் ஒரு நல்ல ஒரு இணைவு  ஒன்று ஏற்படுவதற்கும் ஒன்றையன்று அறிந்து கொள்ளுதல்  ரொம்ப அவசியம். இதுக்கு நாம எல்லாம் டாக்டரா  படிக்கனும்கிற அவசியம் கிடையாது. சராசரியான அறிவு இருந்தா-லே போதுமானது எப்படி? இந்தக் கை என்ன வேலை செய்யுது? இந்தக் கால் என்ன வேலை செய்யுது? இந்த காது என்ன வேலை செய்யுது?

இதற்கு முன்னாடி நான் காளம்பாளையத்திலே வகுப்பு எடுத்திருந்தபோது நான் ஒவ்வொருத்தர்கிட்டேயும் சொல்லியிருக்கிறேன்.  குளிக்கிறது அப்படீங்கறது ஒரு விஷயம்.

அந்தக் குளிக்கிறதுங்கறது ஒருத்தன் ஒழுங்கா குளிச்சான்னா  அவனுக்கு ஆஸ்பத்திரிபோற வேலை வராது.

“ஓம் ஸ்ரீ  பவஸ்ரீ “

அப்படீங்கறது இருந்து 21தடவை நீ ஜெபித்து அந்த நீரை எடுத்து தலையிலே ஊத்தினா எந்த நோயும் வராது, இது இருந்து பெரியவங்க நமக்கு வகுத்து தந்திருக்கக்கூடிய ஒரு நல்ல விஷயம்.

ஒவ்வொன்றையும் உணர்ந்து செய்தல் அப்படீங்கறது தான் இதனுடைய அடிப்படையான சூட்சும கருத்து. என்னையறியாமல், எனக்குத்தெரியாமல், இது நடந்தது, செய்துட்டேன்ங்கற வார்த்தை இந்த யோகம் பயிலக்கூடிய இந்த யோகத்தைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கக்கூடிய எவர்வாயிலிருந்தும் வரக்கூடாது.  ஏனென்றால் ஒன்று நடக்குதுன்னா நிச்சயமா இதற்கு முன்னாடி இது நடப்பதற்கு உண்டான ஒரு செயல் நிச்சயமாக நடந்திருக்கும். ஒரு பெண்ணிருந்து குழந்தை பெற்றுக் கொள்ள பத்துமாதம் ஆகும். குழந்தை பிறப்பதற்குண்டான காரியம் பத்து மாதத்திற்கு முன்னாலேயே நடந்து(நிகழ்ந்து) விட்டது. அப்படி ஒரு நிலை இல்லைன்னா குழந்தைபிறக்க வாய்ப்பு இருக்குமா? இருக்காது இது இதற்கு மட்டுமல்ல.

எல்லாவற்றிற்கும் பொருந்தும் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *