நம்மள நாமே பார்ப்போமே 9

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 9

உங்களுடைய இந்த ஞாபக சக்தி இந்த ஜன்மாவிலேயோ,
அல்லது இந்த 10, 20 வருஷ காலகட்டத்திலேயோ, நீங்கள் செய்யலை அப்படீன்னு நீங்க அடிச்சுப் பேசலாம். அது இப்ப இருக்கக்கூடிய நமது , நீதி மன்றங்களும் ஒப்புக்கொள்ளலாம். தவறு இல்லாத மனிதன், எந்த விதமான ஒரு குற்றமும் இவன் புரியவில்லை அப்படீங்கலாம். ஆனால் உங்களோடது இருந்து ஒரு பகுதிதானே, காலம் என்பது நாம் அறிந்து கொண்டிருக்கக்கூடிய வரையில் மட்டும் தானே. இது எத்தனை பெரிய தொடர்பு எந்த நிலையிலே நாம போயிட்டிருக்கோம்கிறது தெரியாம நாம அதை பத்தி எந்த முடிவுக்குமே வரமுடியாது. அப்ப அந்த நிலை க்கு  ஒரு பேரு தேவைப்பட்டது. அதுக்கிருந்து பெரியவங்க வைச்சதுதான் ஜன்மா. இது முதல் ஜன்மம். இது இரண்டாவது   ஜன்மம், இதற்கு அடுத்த ஜன்மாவில் ஏதாவது ஒரு ஜன்மத்தில் நீ இருந்து இந்த வினைகளை  செய்த காரணத்தினால் உனக்கு இந்த மாதிரி சூழ்நிலைகள் வந்து இருக்கும். ஏனென்றால் காலம் என்பது நமக்குத் தானே அல்லாமல் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய, இயக்கிக்கொண்டிருக்கக்கூடிய சக்திக்கு இல்லை.

அப்போ நம்மைப் பொறுத்தவரைக்கும் நாம் விரும்பக்கூடிய நிலையில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டாலோ, நாம் துக்கப்படக்கூடிய நிலையில் ஒருநிலை ஏற்பட்டாலும், அதற்கும், நமக்கும், சம்பந்தம் இல்லை, இந்தத் துன்பமாகட்டும், அந்த சந்தோஷமாகட்டும் இரண்டுமே மாயை, அப்படீன்னு பெரியவங்க  நமக்குத் தெளிவா சொல்லிட்டுப் போயிட்டாங்க.

சின்ன சின்ன வார்த்தைகளிலேயே அவங்க நமக்கு நிறைய விஷயங்களை சொல்லிட்டுப் போயிருக்காங்க. அந்த சின்ன, சின்ன வார்த்தைகள் என்பது பாடலாக மற்ற விஷயங்களாக நமக்கு கொடுத்து இருக்காங்க. நம்ம மனதில் பட்ட இப்போ

“நன்றேவரினும் தீதேவரினும் நின் செயலால் அன்றி ஆவது  யாதொன்றுமில்லை”.

அவங்க கொடுத்திருக்கக்கூடிய ஒரே விஷயம் இந்த ஒரு வரியை   மட்டும் நீங்க வைச்சு இந்த ஒருலைனுக்குள்ளேயே நீங்க உள்ளேபோய் இந்த ஒரு வரியிலேயே நீங்க சரியாக நின்னுட்டீங்க அப்படீன்னா உங்களுக்கு சுகம் என்பதும், துக்கம் என்பதும்இருக்கவே இருக்காது இது நிஜம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *