நம்மள நாமே பார்ப்போமே 10

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா  உடன் நடந்த உரையாடல்கள் 
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 10

எப்போது நீங்கள் முதலாளியோ அப்போது உங்களுக்கு சுமை அதிகம். எப்போது நீங்கள் தொழிலாளியோ அப்போது உங்களுக்கு சுமை குறைவு. முதலாளிக்கு தொழில்பற்றிய எல்லா விஷயங்களும், தெரிந்தும் தெரிந்த வேலையில் ஈடுபட்டுக்கொண்டேயிருக்கனும். எப்போதும் கவனமாக இருக்கனும், கவனம் பிசகினால் அவனுக்கு நஷ்டம், கஷ்டம் வந்துரும். ஆனால் தொழிலாளிக்கு அப்படி இல்லை, அவன் அன்றைய வேலை என்னவோ சரியான டைம்க்குப் போய், சரியான நேரத்திற்கு வெளியே வந்துவிட்டான் என்றால் முடிந்தது. அன்றைய வேலை  அன்றோடு முடிந்தது. வேலையைப் பற்றிய கவனம் அவனுக்கு இருக்காது. அடுத்தநாள் சரியான நேரத்திற்கு போகனும் என்கிற நினைவுதான் வரும். ஆனால் முதலாளிக்கு அப்படி இல்லை எப்போ வேனாலும் கம்பெனிக்குப் போகலாம், வரலாம். ஆனால், எப்பொதும் கம்பெனியைப் பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கவேண்டும். அப்ப நாம என்ன பண்ணறோம்னா,

“நின் செயலால் அன்றி ஆவதொன்றில்லை”

அப்படிங்கும்போது நாம் ஓரிடத்தில் நம்மை வேலைக்காரன் ஆக்கிகிறோம்.அப்படி ஆக்கிட்டு நீ என்ன சொன்னாலும் நான் செய்யறேன், நீ ஒரு டிச்சுக்குள் போய்அதை சுத்தம் பண்ணனும்னு சொன்னா அந்த நாற்றம் அந்த அசுத்தம், அது எல்லாமே எம் மனசுலே இல்லாம நான் சுத்தம்  பண்ணிறேன். ஒரு நல்ல பஞ்சு மெத்தையிலே ஒரு நல்ல ஏசிரூம்மில் நீ இருன்னு சொன்னாலும் இருந்துக்கறேன். எனக்கு அதுவும் வேலைதான். இதுவும் வேலைதான். நீ என்ன வேலை தர்றியோ அதை நான் செய்துட்டுப்போறேன்.

வேலை செய்யறது மட்டுமே என்னோட வேலை அல்லாமல்  இந்த வேலை அந்த வேலை என்று தரம் பிரிப்பது அந்த வேலையினு டைய தன்மையில் என்னுடைய சிந்தனையில் செலுத்தி இது உயர்ந்தது, தாழ்ந்தது என்று நினைக்கிறது என்னுடைய வேலை இல்லையின்னு  சிந்திச்சிட்டோம்,அப்படீன்னா

 காலை எழுந்ததும் கண் விழிப்பதும், முகம் கழுவி, பல் தேய்ப்பது, குளிப்பது, உடை உடுத்துவது, சாப்பிடுவது முதல், இரவுபடுத்து உறங்குவது வரைக்கும், நாம் ஒவ்வொரு செயலையும் சிந்தித்து, உணர்ந்து செயலாக்கக்கூடிய பக்கவத்தை நாம் பெற்றொமென்றால் ரொம்ப இயல்பாகவும், ஈஸியாகவும் இருக்கும்

  நம்மை இயக்கக்கூடிய சக்திக்கும், நமக்கும் இருக்கக்கூடிய தொடர்பை அறிவதற்கு உண்டான ஒரு மார்க்கம் இருந்து இயல்பா ஏற்படும், அப்ப என்ன பண்ணனும்? பல் தேய்க்கும் போது நம்முடைய பல் இப்போது சுத்தம் ஆகிறது. ப்ரஸ்ஸில் பல் பட்டு பேஸ்ட் மூலமா சுத்தம் ஆகிறது. தேய்க்க, தேய்க்க சுத்தமாகிறது என்கிற சிந்தனையோடு அதோடு ஒன்றினால், நாம் ஒவ்வொரு காரியத்திலும் இப்படி செய்தால் நம்மால் ஈஸியாக தவம் செய்யமுடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *