நம்மள நாமே பார்க்கலாமே 11

ஸ்ரீ உமா மகேஸ்வரர் ஆலயத்தில் ஆத்மா உடன் நடந்த உரையாடல்கள்
தொகுத்து எழுதியவர் : திருமதி ஜெயந்தி
தட்டச்சு : திருமதி லதா மகரிஷி

பகுதி 11

தவம், என்பது தன்னுள் தான் அமிழ்ந்திருத்தல் மட்டுமே தவம். தன்னுள் தான் அமிழும் போது இந்த பிரபஞ்சத்தை இயக்குவிக்கக்கூடிய சக்திக்கு உண்டான

சக்தியிடம் நாம் தொடர்பு கொள்வதற்கு உண்டான ஒரு உணர்வு (ஆத்மா) நம்மிடம் இருந்து கிளம்பும். அது உடல் சம்பந்தப்பட்டது அல்ல. ஆனால், உடலும் ஒரு சம்பந்தம் ஏன்? இந்த உடல் இருக்கிறதனாலேதானே நாம பேசறோம். இந்த உடல் இருக்கிறதுனாலே தானே இதைப் பத்தியெல்லாம் சிந்திக்கிறோம். அப்போ எந்த அளவிற்கு நாம் இறைவனைப் பற்றியும், ஆன்மீகத்தைப் பற்றியும் நாம் சிந்திக்கின்றோமோ, அதே அளவு இந்த உடலைப்பற்றியும் சிந்தித்தே தீரனும். 

 உடலினுடைய தன்மைகளை ஒழுங்குபடுத்துவதற்கு உண்டான ‘கற்ப’ முறைகள், உணவு பழக்க வழக்கங்கள் அதற்கு அடுத்தபடியா பலம் அதிகம் தேவை என்பதற்கு வேண்டி

நாம் செய்யக்கூடிய காரியத்திற்கும், செய்யக்கூடிய செயலுக்கும், உகந்தபடி பலம் வேணும். அப்படிங்கறதுக்கு வேண்டிய சில பயிற்சி முறைகள், அது எதுல வரும்? யோகாவில் . 

யோகாசனம் என்பதுடைய அடிப்படையிலேயே உடலையும், மனதையும் இணைத்து செய்யக்கூடிய ஒரு வேலை

என்னன்னு பார்த்தீங்கன்னா, இது தனியாகவும், அது தனியாகவும் நிற்காது. யோகா ஆரம்பத்தில் பயிற்சி பெறும்போது இது தனியாவும், அது தனியாகவும் தான் தெரியும். ஆனால் அதனுள் இணைந்து உள்ளே போய் அப்படியே வெளியே வரும்போது பார்த்தோம்ன்னா, உடலும், மனமும் இணைந்து ஒன்றுக்கொன்று கைகோர்த்து இயல்பான சூழ்நிலையில் நடக்கக்கூடிய விஷயங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *