images

படிக்க பயன் பெற

                நீரிழிவு நோய் உள்ளவர்கள் பழங்களை சாப்பிடுவதில் கவனத்துடன் இருப்பது நல்லது.  பழங்கள் உடலுக்கு நன்மை செய்தாலும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு அது சில நேரம் எதிர்மறையாகி விடுகிறது.

                நீரிழிவு நோயாளிகளை பொறுத்தவரை ஒவ்வொரு பழமும் ரத்த சர்க்கரை அளவை மாற்றும் திறன் கொண்டது.  முன்னெச்சரிக்கையாக சில பழங்களை உண்ணாமல் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் ரத்த சர்க்கரை அளவை மோசமாக உயர்த்தக் கூடிய பழங்களும் உள்ளன.  சர்க்கரை அளவின்படி பழங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன.  நீரிழிவு நோய் உள்ளவர்கள், ஒவ்வொரு பழத்தின் ஜி-ஐ (GI. Glycemic Index ) குறியீட்டு எண்ணை அறிந்து கொண்ட பின் உண்ணவேண்டும்.  ஜி ஐ என்பது கிளைசிமிக் குறியீடு.  நீரிழிவு நோய் உள்ளவர்கள் 55 அதற்கும் குறைந்த அளவுள்ள ஜி ஐ குறியீட்டை கொண்ட பழங்களை உண்ணலாம். ஆப்பிள், பேரிக்காய் போன்றவற்றில் கார்போஹைடிரேட்டின் அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோய் உள்ளவர்களும் இந்தப் பழங்களை சாப்பிடலாம்.

மாம்பழம் :-  மிகுந்த சர்க்கரை இருப்பதால் பழங்களின் ராஜா எனப்படும் மாம்பழத்தை தவிர்க்க வேண்டும்.  உட்கொண்டால் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

சப்போட்டா :-  இந்த பழத்தின் ஜி ஐ குறியீட்டு எண் 55 க்கு மேலே உள்ளதால் இதை தவிர்க்கவேண்டும்.  இப்பழத்தில் சர்க்கரையும், கார்போஹைடிரேட்டும் அதிகம்.

திராட்சை:- நார் சத்து, வைட்டமின்-என பழ ஊட்டசத்துக்கள் நிறைந்த திராட்சையில் அதிக அளவு சர்க்கரையும் உள்ளது.  நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது.  100 கிராம் திராட்சையில் 15 கிராம் கார்போஹைரைட் உள்ளது.

வாழைப்பழம் :- அரைக்கப் வாழைப்பழத்தில் 15 கிராம் கார்போஹைரைட் உள்ளது.  இதன் ஜி ஐ 46 முதல் 70 வரை பழுத்த வாழைப்பழங்களை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.

தர்பூசனி:-  குறைந்த நார் சத்து குறைந்த கலோரி உடைய தர்பூசனி பழத்தில் ஜி ஐ குறியீடு 72 வைட்டமின் ஏ சியும் அதிகமாக உள்ளன.  அரைக்கப் தர்பூசனியில் 5 கிராம் கார்போஹைரைட்டும் உள்ளது.

அன்னாச்சிபழம்:- அதிக கிளைசிமிக் குறியீட்டை கொண்டு இருப்பதால் இப்பழத்தை தவிர்க்க வேண்டும்.  ஒரு சிறிய கோப்பை அன்னாச்சி பழத்தில் 20 கிராம் கார்போஹைட்ரைட் அதிகமாக உள்ளது.

சீத்தாபழம்:- வைட்டமின்-சி, கால்சியம்,  இரும்பு, நார்சத்து நிரம்பி இப் பழத்தில் சர்க்கரை அதிகம்.  100 கிராம் சீதாபழத்த்தில் 23 கிராமைவிட அதிகமாக கார்போஹைட்ரைட் உள்ளது.

முந்திரி பழம்:-  நீரிழிவு நோயாளிகள் இதை தவிர்க்க வேண்டும்.  103 ஜி ஐ மதிப்பு கொண்ட இப்பழத்தின் கால்பங்கிலேயே 24 கிராம் கார்போஹைட்ரைட் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>