Constant Remembrance of the Master is superior to Meditation
images (29)

யோகமுத்ரா

செய்முறை:

                பத்மாசனத்தில் அமர்ந்து, இருகைகளையும் இணைத்து பின்புறம் கொண்டு சென்று ஒன்றோடொன்று பொருத்தி, மூச்சை மெல்ல சுவாசித்தவாறு முன்புறம் குனிந்து நெற்றியால் தரையை தொடவும். சில விநாடிகள் அதே நிலையில் இருந்து நிமிரவும். இப்படி 3 அல்லது 5 முறை செய்யலாம்.

 பலன்கள்:

                பெண்கள் மகப்பேறுக்குக் பின் வயிறு பெரிதாவதையும், உடல் தடிப்பையும் தடை செய்யும். முதுகின் தசை, எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும், மலச்சிக்கல் நீங்கும், தாது இழப்பு, பலக்குறைவு நீங்கும். நுரையீரலில் உள்ள நோய்க்கிருமிகள் நாசமடையும். பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும்.

5  ASTROLOGY

ஜோதிட அனுபவம்

அன்பார்ந்த இணைய தள வாசகர்களுக்கு,

                 ஜோதிடத்தில் எத்தனையோ விஷயங்கள் புதைந்துள்ளதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம். இதில் சிக்கல் என்னவென்றால் எல்லா விஷயங்களும் உண்மையானதாகவும், சரியானதாகவுமே இருக்கிறது. ஆனால் யாருக்கு உண்மையானதாகவும், சரியானதாகவும் இருக்கிறது என்று அறிந்து சொல்வதில்தான் குழப்பமும், சிக்கலும் வருகிறது.

                               7ல் செவ்வாய் இருந்தால் விவாக தோஷம், களத்திர மரணம் பலன். இது நிஜம். பல இடங்களில் இது பொய்யாகிறது. சில இடங்களில் இந்த பலன் நிஜமாகிறது. இது எப்படி? ஏன் இப்படி வினா உருவாகிய பின் விடை தேடி, அடைய பல கிரந்தங்கள் ஜோதிட ஆராய்ச்சி நூல்கள் எனத் தேடி பின் அனுபவஸ்தர்கள் அருகில் இருந்து அவர்களிடம் பாடம் ஒரு 5-10 ஆண்டுகள் முடித்த பின்னும் ஏன் இப்படி என்ற கேள்வி மட்டுமே தங்கிக் கொண்டே இருக்கிறது. ஆயுள் சம்பந்தபட்ட விசாரத்தில் இந்த சிக்கல் மேலும் இறுகுகிறது. இரட்டை ஜெனனத்திலும் இப்படியே இதை சரி செய்ய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளது.

 

                1. கணித முறை:  முறையான தெளிவான கணிதம் அனுபவத்தில் எத்தனை சரியாக கணிதம் செய்து பார்த்தாலும் பலன்கள் பல சமயங்களில் தப்பிவிடுகிறது. அப்படி தப்பிவிடும் போது கணிதத்தில் தவறா? அல்லது கணிதத்தை உருவாக்கியவர் தவறா? என்ற சந்தேகமே வந்துவிடுகிறது. காரணம் முழு மனதுடன் சந்தேகம் தெளிய வேண்டும் என்கிற ஆசையிலும் மிக கவனமாக கணித்துப் பார்த்தாலும் முடிவு தவறும் போது ஒரு சோர்வு ஏற்படுகிறது.

                 இப்போது நான் சொன்னது எல்லா ஜோதிடர்களுக்கும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு முறையாவது நிகழ்ந்திருக்கும்.

                 2.  உபாசனை பலம்:  இதற்கு குரு வேண்டும். நியம நிஷ்டைகள் வேண்டும். திட வைராக்கியம், இப்படித் தான் வாழ்வேன் என்ற தீர்மான சிந்தனை, அதை செயல்படுத்தும் தைரியம் இது எல்லாம் வேண்டும், இது எல்லாம் இருந்தால் பலன்கள் தவறுவது தவிர்க்கப்படும்.

                 உண்மையைச் சொன்னால் கணிதத்தின் மூலம் என்ன பலன் சொல்ல வேண்டுமோ, அந்த பலனை சரியானபடி முழுமையாக சொல்ல முடியும்.

                 வருஷாதி நூலில் சொல்லியிருப்பது போல் குரு வாக்கும், குல தெய்வ அனுக்கிரகமும், இஷ்ட தெய்வ சித்தியும் இருந்தால் பலன்கள் தவறாது.

                 அனுபவஸ்தர்கள் இது உண்மை தான் என்று சொல்கிறார்கள். ஒத்துக் கொள்ளவும் செய்கிறார்கள். நான் முயன்று பார்த்ததில் எனக்கும் இது சரியென்றுபடுகிறது. கணிதத்தை மட்டுமே கருத்தில் கொண்டிருப்பவர்கள் இதையும் கருத்தில் கொண்டால் மேலும் சிறப்பாக இருக்கலாம்.

அர்த்தசர்வாங்க ஆசனம்

 செய்முறை:

                விரிப்பின் மேல் தரையில் படுத்து நேராக கால்களைச் சேர்த்து தொடைகள் நெருங்கியிருக்குபடி வைத்துக் கொண்டு முழங்கால்களை மடக்கி நிறுத்தவும். அச்சமயம் இரு கைகளையும் இரு புறமும் இடுப்புக்கு கீழ் விலாபுறத்தில் பிடித்து சுவாசத்தை வெளிவிடாது உடல் பளுவை தூக்கி புறங்கைகள், கழுத்து, பிடரி ஆகியவற்றின் மீது சுமத்த வேண்டும். இந்நிலையில் சுவாசம் மெதுவாக நடைபெற வேண்டும். 10 முதல் 25 விநாடிகள் செய்துவிட்டு இயல்பு நிலைக்கு வரவும். இரண்டு முறை செய்வது நலம்.

 பலன்கள்:

                இந்த அர்த்தசர்வாங்க ஆசனம், அடிவயிறு சம்பந்தப்பட்ட இரத்த நாளங்களிலிருந்து மாதாந்திர மாதவிடாய் சீராக செயல்பட வைக்கும். மாதவிடாயின் போது ஏற்படும் தளர்வுகளை சீர் செய்யும். இருதய பலவீனம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தலையனையின் உதவியால் செய்ய வேண்டும்.

946075_567988379947192_587505588_n

மஹா சிவராத்ரி வ்ரதநிர்ணயம்

                 மகரிஷி மஞ்சரி புத்தகத்திற்காக சிவராத்ரி வ்ரதநிர்ணயத்தைப் பற்றி நமக்கு, இந்த கட்டுரையை தந்த திரு. ஜோதிட கலாநிதி டாக்டர் எஸ்.சுயம்பிரகாஷ், வி.கி.,றிலீ.ஞி., அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வோம்.

                 சைவ சமயத்தில் மஹா சிவராத்ரி விரதம் மிக முக்கிய சிவவிரதமாகும். உபவாசத்துடன் இரவு முழுவதும் கண்விழித்து நான்கு காலமும் சிவபூஜை செய்து சிவ பெருமானை ஆத்மார்த்தமாயும், ப்ரார்த்தமாயும் வழிபடுவது இவ்விரதத்தின் சிறப்பாகும். க்ருதயுகத்தில் முருப்பெருமானும், திரோதாயுகத்தில் விநாயகரும், த்வாபரயுகத்தில் ஸ்ரீமஹா விஷ்ணுவும், கலியுகத்தில் ரிஷிகளும், சிவயோகிகளும் பூஜிப்பதாக புராணங்கள் கூறும். எனவே இந்த விரதத்தை முறையோடு அனுஷ்டிப்பவர்களுக்கு அளவற்ற புண்ணியம் கிடைக்கும் என்பது சைவ ஆகமங்களின் ஒருமித்த கருத்தாகும்.

                 சைவத்தில் இத்தகைய முக்யத்துவம் வாய்ந்த சிவராத்ரி விரதநிர்ணயத்தில் சில சமயம் குழப்பங்கள் நேரிடுவதுண்டு. காலக்கணக்கீடே இதன் காரணமாகும். இது பற்றி அறிந்து கொள்வது மட்டுமல்லாது க்ஷயமாதம், அதிமாஸம் பற்றியும் அறிந்து கொள்ளல் மஹா சிவராத்ரி விரதத்தை நிர்ணயப்பதற்கு உறுதுணையாய் நிற்கும். காலக்கீட்டில் சாந்த்ரமானம், சௌரமானம் எனும் இருவகை பேதங்களுண்டு. இவ்விரு முறைகளுமே தமிழகத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. சௌரமானம் என்பது சூரியனை அடிப்படையாகக் கொண்டது. சூரியன் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குப் பிரவேசிக்கும் கால அளவு ஒரு மாதமாகக் கணக்கிடப்படுகிறது. இக்கால அளவு ஏறக்குறைய ஒரு மாதத்திற்கு 31 நாள் 37 நாழிகைக்கு அதிகப்படாமலும், 29 நாள் 21 நாழிகைக்கு குறையாமலும் இருந்து வரும். சௌரமானப்படி ஒரு வருடத்தில் காலப்ரமாணம் 365 நாள் 15 நாழிகை 31 வினாடி 15 தற்பரைகளாகும்.

                 வளர்பிறை முதல் அமாவாசை முடிய உள்ள கால அளவே சாந்த்ரமான மாதம். 30 திதிகளை கொண்டது ஒரு சாந்த்ரமான மாதமாகும். ஒரு சாந்த்ரமான மாதத்தின் கால அளவு 29 நாள் 18 மணிக்கு அதிப்படாமலும், 29 நாள் 7 மணிக்கு குறையாமலும் இருக்கும். சாந்தரமான வருஷப்பிரமானம் 354 நாட்களாகும். ஒவ்வொரு மாதத்தின் பெயரும் பௌர்ணமி அன்று எந்த நட்சத்திரம் உள்ளதோ அதன் பெயரே அந்த மாதத்திற்கு இடப்பட்டு உள்ளது. ஒரு சாந்த்ரமானத்திற்கும், ஒரு சௌரமானத்திற்கும் 11 நாட்கள் வித்தியாசம் உண்டு.

 க்ஷயாதி மாதம்:

                ‘அஸக்ராந்தி மாசோ அதிமாச; ஸ்புடஸ்யாத் த்விசங்க்ராந்தி மாஸ:                க்ஷயாக்ய………………                                                                             – சிந்தாந்த சிரோமணி

 என்பதின்படி ஒரு சாந்திரமான மாதத்தில் சூரிய சங்கிரமணம் நிகழாமல் போனால் அது அதிமாஸமாக கருதப்படுகிறது. அதே போல ஒரு சாந்திரமான மாதத்தில் சூரிய சங்கிரமணம் இருமுறை நிகழின் அது க்ஷய மாதம் எனப்படும். ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசை வரின் அது சமசர்ப்பம் எனப்படும். ஒரு சமசர்ப்ப மாதத்தில் இரு சூரிய சங்கிரமணம் நிகழ்ந்தால் அது அம்ஹஸ்பதி மாதம் எனப்படும். முன் கூறியபடி சங்கிரமணம் நிகழாமல் இரு அமாவாஸை ஏற்படுவதையும் அதிமாசம் என்றும், இரு சங்கிரமணம் நிகழ்வதை க்ஷயமாஸம் எனவும் கூறப்படும். க்ஷயம் என்பதை அம்ஹஸ்பதி என்றும் அதிமாசமானது சர்ப்பம் என்றும் கூறப்பெறும். சம்சர்ப்பமும், அம்ஹஸ்பதியும் ஒருமித்து வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். பத்தொன்பது ஆண்டுகளுக்கு பிறகு ஒரு முறை மாறி மாறி சம்பவிக்கும். இவ்வாறு சம்சர்ப்பம், அம்ஹஸ்பதி சம்பவிக்கும் ஆண்டுகளில் மஹா சிவராத்ரி விரத நிர்ணயம் பற்றிய குழப்பம் ஏற்படுவதுண்டு.

                 கடந்த காலங்களில் 1907, 1926,1945,1964,1983, 2002 ஆகிய ஆண்டுகளிலே மஹா சிவராத்ரி விரதம் தை மாதத்தில் அனுஷ்டிப்பதால் அல்லது மாசி மாதத்தில் கடைபிடிப்பதா என்ற குழப்பங்களும், சர்ச்சைகளும் நடைபெற்றன. இதற்கு நடைமுறையில் கணக்கிட பெறும் சாந்திர சௌரமானங்ளே காரணம் ஆகும்.

 சிவராத்ரி ஒரு விளக்கம்:

                               மாசி மாதத்தில் கிருஷ்ணபக்ஷத்தில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டித்தல் வேண்டும். த்ரயோதசி எனப்படும் பதின்மூன்றாம் சக்தியும், சதுர்த்தசி எனும் பதிநான்காம் நாள் சிவமும் ஆகும். நடுநிசியில் சதுர்தசியும், அதற்கு முன்னம் த்ரயோதசியும் இருப்பது உத்தமம். குறைந்த நேரம் த்ரயோதசியும், அதிக நேரம் சதுர்தசி அல்லது அதிக கால அளவு த்ரயோதசியும், குறைந்த கால அளவு சதுர்தசியும் அல்லது சூரிய உதயத்தில் த்ரயோதசி இருந்து பின்னர் நாள் முழுவதும் சதுர்தசி இருந்தாலும் அது சிவராத்ரியாகும். அமாவாசை திதி சிறிதளவு கூட இருக்கலாகாது. அது அதிக தோஷம் தரும். த்ரயோதசி, சதுர்தசி, அமாவாசை மூன்றும் கூடும் நாளில் திருவோணம் நட்சத்திரம் கூடினால் அது அதம சிவராத்ரி ஆகும். இதை அனுஷ்டிப்பது பாபமாகும். இதற்கு ப்ராயஸ்சித்தம் செய்ய வேண்டும் என குமார தந்திரம் கூறுகிறது. இதன்பிரமாணம் பின்வருமாறு:

 ‘தன்மாஸே க்ருஷ்ணப«க்ஷது வித்யதெயா சதர்தசீ

  தத்ராத்ரி சிவராத்ரிஸ்யாது சர்வபுண்ய சுபாவஹ:

ராத்ரௌ யாமத்வா தர்வாக்கடிகைகா மகாநிதி

தஸ்யாம் சதுர்தசீ யஸ்மாத் தத்ராத்ரம் சிவராத்ரகம்

 முக்யாத்ரயோதசீ மிஸ்ரா பர்வமிஸ்ராதமாகமா

 மத்யம் சிவராத்ரிஸ்யாத் அஹோராத்ரஞ்ச சதுர்த்தசீ

தஸ்யாம் பூஜ்யோ மஹாதேவ:

 சைவமும் ஆகமங்களும்:

                 தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களுமே ஆகம விதிப்படி நிர்மாணிக்கப்பட்டு, ஆகமவிதிகளின்படி நித்ய நைமித்திக காம்ய கர்மாக்களும் உற்சவங்களும் நடைபெற்று வருகின்றன. சைவசமயம் எனும் சரீரத்திற்கு ஜீவனாக விளங்குவது சிவ ஆகமங்களே ஆகும். எனவே சைவசமயத்தவர் தத்தம் ஆகமங்களின்படியே நித்ய நைமித்யகர்மங்களும், விரதங்களும் அனுஷ்டிப்பதே மரபு. அதைவிடுத்து ஸ்மிருதிகள் வழியில் அனுஷ்டிப்பது தவறாகும். சைவ ஆகமங்கள் அனைத்துமே சௌரமானத்தையே அனுஷ்டிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. சாந்த்ரமானம் கூடாதெனவும் தெளிவாக்குகின்றன. இதனை,

                 ‘சௌரமானே வ்ரதமம் குர்யாத்சாந்த்ரமானனே நகாரயேத்’

 எனவும் சிந்தயம் எனும் ஆகமம் சௌரமானத்தில் அனுஷ்டிக்க வேண்டும் எனக் கூறுகிறது. மேலும் உத்திரகாரணாகமம்.

 “மாகல்குணய:க்ருஷ்ண சதுர்தஸ்யாம் சுபதிதௌ

சௌரமாஸே வ்ரதம் குர்யாத் சாந்தரமானே நாகாரயேத்

 என சௌரமாஸேத்திவ் தான் விரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதைத் தெளிவாக்குகிறது. தவிர

 “துலாஸ்நான முஷாப்யங்கம் க்ருத்திகாதி பவமேவ

  தனுர்மாசி ஹரெ:பூஜா சிவராத்ரி வ்ரதம் ததா

 சௌரமானேன கர்த்தவ்யம் சாந்த்ரமானே ந கராயேம்”

 எனும் பிராமணமும் சௌரமானப்படியே சாந்த்ராதிமானிகள் மாக பகுளத்தில்-தைமாதத்தில் விரதம் அனுஷ்டிக்கலாம். ஆனால் தமிழர்கள் சௌரமானிகள் ஆனதாலும், சிவாகமங்கள் யாவுமே சௌரமானத்தையே வலியுறுத்துவதாலும், க்ஷயாதி மாஸம் வரும் ஆண்டுகளிலும், மாசி மாதத்தில் சிவராத்ரி விரதத்தை அனுஷ்டிப்பது தான் நியாயம். மேலாக காமிகம் எனும் ஆகமத்தில், மகரத்தில் சூரியன் வரும்போது தை மாதத்தில் மாகஸ்நானம் செய்யவும். மாகஸ்நான விரத முடிவில் சிவராத்ரியை அனுஷ்டிக்க கூறப்பட்டுள்ளது. இதிலும் விசேஷம் யாதெனின் மகரரவியாகிய தை மாதத்தில் சாந்தரமான மாக(மாசி) முடிவடைந்துவிடும். மறுபடி 30 நாள் மாகஸ்நானம் செய்யவும். அப்படிச் செய்தபின் கடைசியில் க்ருஷ்ணபக்ஷ சதுர்தசியில் சாந்தரமான புஷ்யமாக அதாவது தை மாதம் போல் தையில் வரும் சாந்தரமான மாக மாச கிருஷ்ண சதுர்த்தசியை நீக்கி மாசியில் வரும் கிருஷ்ண சதுர்த்தசியில் மகாசிவராத்ரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

                 மகாசிவராத்ரி விரதம் பற்றிய காலக்கணக்கீட்டினை சிந்தியம் எனும் ஆகம நூல் பின்வருமாறு தெளிவாக்குகிறது.

 

“சிம்ஹேது ரவி சம்ப்ராப்தெ ரோகிணிசஹிதாஷ்டமி

 ததாதிகணனம் க்ருத்வா காசீதிசரத்ரா

 சதோபேத தினாந்தேது சிவராத்ரி இதி நிஸ்ச்சய:

                 சிம்ம ராசியில் சூரியன் நிற்கும் ஆவணி மாதத்தில் ரோகிணியோடு கூடிய அஷ்டமி தினம் முதல் எண்ணி வரும் 184வது நாளின் இறுதியில் சிவராத்ரி காலமாகும். எந்த வருஷத்திற்கும் இக்கணக்கீடு பொருந்தும். இதில் விசேஷ விதியாது எனில் 184-ம் நாள் சதுர்தசி இல்லாவிடினும் அல்லது பங்குனிக்குச் சென்றாலும் மாசியில் சதுர்தசியில் வ்ரதம் அனுஷ்டிப்பது தான் சரி. 24-09-1920-ம் ஆண்டு காஞ்சி பரமாச்சார்யாள் முன்னிலையில் நடைபெற்ற சாஸ்திரசதஸில் விருதை சிவஞான யோகியின் கருத்துகளை அதாவது மாசியில்தான் சிவராத்ரி வ்ரதம் அனுஷ்டிக்க வேண்டும் என்பதினை சிவாகம பண்டிதர்கள் முன்னிலையில் ஆசார்ய சுவாமிகளும் ஆதரித்தார்கள். இதே கருத்தினை ஆகமங்களும் அங்கீகரிக்கின்றன.

 “மாக பால்குணயோர் மத்யெ க்ருஷ்ணப«க்ஷ சதுர்த்தசீ

 சிவராதரி திக்யாதஸ் ஸர்வக்ஞாநொ உத்தமோத்தமம்”

                                                                   –காரணாகமம்

 “மாக பால்கணய க்ருஷ்ண சதுர்தஸ்யாம் சுபதினே

சௌராமாஸே வ்ரதம் குர்யாத் சாந்த்ரமாநேன ந காரயேத்”

                                     –உத்கரகாரணகமம் & சுப்ரபேதம்

 “கும்பம்கதே திவாநாதே க்ருஷ்ணேயாது சதுர்த்தஸி

  மாகமாஸ்ய சிதெப«க்ஷ வித்யதெயா சதுர்த்தசீ தத்ராத்ரி சிவராத்ரி”

                                        –காமிகாகமம்

ஆகம ப்ராமணங்கள் அனைத்துமே சௌரமான மாசி மாதத்தில் தான் அனுஷ்டிக்க வேண்டும் எனத் தெளிவாகக் கூறுகின்றன. இதைவிடுத்து சாந்திரமானத்தில் அனுஷ்டிப்பதால் ஆயுள், குடும்பம், செல்வம் இவை நாசமாகும் என்பதினை,

ஸர்வேஷாம் சௌரமாநகம் பராத்தேசாலய

யேஷ்வேஷ§ சௌரமானே நாகரயேத்

சௌரமான  விஹாயாத சாந்திராதிபி: க்ருதீதத்யதி

                                ஆயு:ஸ்ரீபுத்ராஞ்ச தத்கர்மம் நிஷ்பலம் பவேத்.

 எனத் தெளிவாகவே கூறுகிறது.

U1

கிரக பெயர்ச்சி பலன்கள் அறிய

அன்பு சார்ந்த வாசகர்களுக்கு வணக்கம்.

                 கிரகங்களின் பெயர்ச்சி பலன்களை அவரவர்கள் அறிய தன் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் சார பலன், அஷ்ட வர்க்கம், மூர்த்தி நிர்ணயம் ஜாதகத்தில் உள்ள கிரக நிலையை கோசார கிரகம், தொடும் நிலை அல்லது அதை நோக்கி நகரும் நிலை அல்லது அதை விட்டு விலகி நகரும் நிலை இவற்றையெல்லாம் மனதிற் கொண்டு பலன் அறிந்தால் அதிகபட்சமான சரியான பலனை அறிய முடியும் என்பது ஜோதிட வல்லுனர்களின் அபிப்பிராயம்.

                 சிந்தித்துப் பார்த்தால் சரியென்றுதான் படுகிறது. இதில் மறுப்பதற்கோ மாறுபட்ட கருத்திற்கோ இடமில்லை. அதனால் பொதுவாக ராசி பலனை அறிந்து கொண்டாலும் கிரக பெயர்ச்சி பலன்களை துல்லியமாக அறிய அவரவர்களின் ஜோதிடர்களை மேலே கூறிய வழிகளில் ஆராய சொல்லி பலன் அறிந்து கொள்வது சாலச் சிறந்தது.

                 கிரக பெயர்ச்சி ஏற்படுவதினால் உண்டாகும் சுப அசுப தன்மைகளில் சில ராசி நேயர்கள் அசுப தன்மைகளை அனுபவிக்க நேரும் போது பரிகாரம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நாம் சிந்திக்க நேரிடுகிறது.

                 ஜோதிட அடிப்படை தெரியாதவர்கள் கூட நவகிரகங்களின் திருத்தலங்கள் அறிந்து வைத்திருப்பது நாம் நடைமுறையில் பார்க்கிறோம். கிரக பெயர்ச்சி காலங்களில் பெயர்ச்சி கிரகத்தின் திருத்தலத்திற்கு சென்று வழிபட்டு வருதல் அங்கு பூஜைகளில் கலந்து கொள்ளல் போன்றவை பரிகாரமாகும். இது ஒரு விதம்.

                 எனக்கு ஜோதிடத்தில் ஊக்கம் தந்து ஜோதிட நுணுக்கங்களை நன்கறிந்த, ஜோதிடத்தில் மிகுந்த அனுபவம் உள்ள உயர்திரு. எஸ்.சுயம் பிரகாஷ் அய்யா அவர்களிடம் இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்ன கருத்துக்கள் எனக்கு உடன்பட்டவையாய் இருந்தது அதை வாசகர் முன் வைக்கிறேன்.

                 அவரிடம் நான், என்னங்கய்யா சனி மாறுது, ஏழரை சனி, அஷ்டம சனி, கண்டக சனி அப்படீன்னு சில ராசிக்காரர்கள் அசுப பலனை அனுபவிப்பார்களே என்ன செய்யறது? திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் தீர்த்தமாடி சனி பகவானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வர சொல்லிவிட வேண்டியதுதான், அவர்கள் அசுப பலன் குறையும் தானே என்றேன். அதற்கு அவர் என்ன ஆத்மா சனி பகவான் திருநள்ளாறில் மட்டும்தான் இருக்காரா என்ற வினாவை என்னிடம் எழுப்பினார்.

                 நான் அதற்கு நீங்க கேக்கறது புரியலீங்க அய்யா என்றேன். அதற்கு அவர் ஆத்மா நான் சொல்றது என்னென்னா உதாரணத்துக்கு யூ.எஸ்-ல் இருக்கிறவங்களுக்கும் இதே சனி பெயர்ச்சி உண்டு அப்ப அவங்களை திருநள்ளாறு வர சொன்னால் அவர்களால் வர முடியுமா? என்று கேட்டார். அதற்கு நான், தேவைன்னா வந்து தானே ஆகனும் என்றேன்.

                 அப்படியில்லை ஆத்மா, சாஸ்திரம், ஜோதிடம் சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் ஒரு ஜோதிடனுக்கு தெரிய வேண்டிய விஷயங்கள் யந்திரம், தந்திரம், மந்திரம் பூஜை முறைகள் மற்றும் சிற்பம், வாஸ்து, இசை இது எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும், அப்படி தெரிந்திருந்தால் மட்டுமே முழுமையான ஜோதிடனாக முடியும்.

                 ஆத்மா, பூஜைகளின் மூலம் மந்திரங்களினால் கலசத்தில் இறைவனை ஆவாஹனம் செய்து சங்கல்பத்தின் மூலம் நமது தேவைகளை சமர்ப்பிக்கும் போது அதற்கு உண்டான பலனை நாம் அடையலாம்.

                 இப்ப நான் சொன்னதை சிந்தித்துப் பார், அப்படி நீ சிந்தித்து பார்த்தால் யூ.எஸ்-ல் இருக்கிறவங்க அவங்க இருக்கிற இடத்திலேயே பரிகாரம் செய்துக்க முடியும், மந்திர, யந்திர, தந்திர சாஸ்திரம் அப்படித்தான் சொல்கிறது என்றார்.

                 யோசித்து பார்த்த போது எனக்கும் இது சரியென்றுபட்டது, திருநள்ளாறு, ஆலங்குடி, காளஹஸ்தி, திருநாகேஸ்வரம் செல்ல முடியாதவர்கள் இந்த முறையை பின்பற்றி பயன் பெறுங்கள்.

Buddha in yoga

உத்தான பாதாசனம்

 

 செய்முறை:

                நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு உடம்பின் பக்கவாட்டில் ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி, சிறிது நேரம் அப்படியே நிறுத்தி பின் மெதுவாக கால்களை இறக்கவும். சாதாரண மூச்சுடன் செய்யவும், 2 முதல் 4 முறை செய்யலாம்.

 பலன்கள்:

                அடிவயிறு இறுக்கம் கொடுக்கும். ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து நாடி நரம்புகள் தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப் பின் இந்த ஆசனம் செய்தால் தொந்தி விழாமல் வயிறு சுருங்கும்.

Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Translate »