சிறகு – 3

துர்அதிர்ஷ்டத்தை நல்ல வாய்ப்பாக ஏற்றுக் கொள்ளுங்கள்

துர்அதிர்ஷ்டத்தை மிக சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அது நல்ல வாய்ப்பாக மாறிவிடும்.

நட்சத்திர சார சூட்சமம்

 ஆனை முகனையும் ஈசனையும் தாய் பராபரையையும் பிரார்த்தித்து அனுபவத்தின் வாயிலாக சார கதிப்படி கிரகங்கள் நடத்தும் லீலா வினோதங்களை உங்களுக்கு அளிக்கிறேன்.

ஜோதிட கலையில் லக்னம் என்னும் உயிர் ஸ்தானத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து உடல் ஸ்தானமாக கருதப்படும் சந்திரன் நின்ற வீட்டிற்கு இரண்டாவது பட்சமாக முக்கியத்துவம் கொடுக்கபட்டு அவர் அவர்கள் பலாபலன்கள் பார்க்கப்பட்டும் சொல்லப்பட்டும் வருகிறது. இது இப்படி இருக்க சத்தியரிஷி, அத்திரி, சட்டமுனிவர் போன்றோர் கருத்துப்படி நட்சத்திர சாரகதிப்படி பலன்களை காணும் போது அப்பலன்கள் நடைமுறைக்கு ஏற்க்குறைய ஒத்து வருவதை காணலாம் அதனால் தான் சாரம் அறியாதவன் நூலை அறியான் என சொல்ல பட்டதோ என்னவோ?

 நட்த்திர சாரயியல் கணிதப்படி பார்க்கும் போது லக்னம் அமைந்த நட்சத்திரம் அதன் அதிபதி ஆட்சி உச்சம் நட்பு பலம் பெற்று 3.6.8.12ல் இல்லாமல் சூன்ய தன்மை பாதக தன்மை பெறாமல் இருக்க வேண்டும். இதே போல் சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதியை பார்க்க வேண்டும். இதில் எது அதிக பலத்துடன் காணப்படுகிறதோ அதையே லக்னமாக பாவித்து பலன்களை சொல்ல வேண்டும். பிறந்த நட்சத்திரம் எதுவோ அதற்கு 3.5.7வதாக வரும் நட்சத்திரங்களில் நிற்கும் கிரக திசையானது எந்த லக்னத்தில் பிறந்தவர்கள் ஆனாலும் அவ்வப்போது பாதிப்பை தராமல் இருக்காது. 1.9வது நட்சத்திரம் நின்ற கிரக திசைகள் புத்தி அந்தரம் மத்திம பலனை தரும் நன்மை தீமை கலந்து நடக்கும்.

 திசா நாதன் சூரியனாகி அவர் நின்ற நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக வந்தால் சூரிய திசை பலன்கள் “அவுட்”. இதே போல் சந்திரனுக்கு 7வது நட்சத்திரம், புதனுக்கு 22வது நட்சத்திரம் செவ்வாய்க்கு 3வது நட்சத்திரம், குருவிற்கு 6வது நட்சத்திரம், சுக்கிரனுக்கு 24வது நட்சத்திரம், சனிக்கு 8வது நட்சத்திரம், ராகு, கேதுவுக்கு 20வது நட்சத்திரம் பிறந்த நட்சத்திரமாக வந்து அவர் அவர்கள் திசா புத்தி நடந்தால் நல்ல பலன்களை யார் சொன்னாலும் நம்பாதீர்கள், நம்பி மோசம் போகாதீர்கள்.

 அஸ்வினி, மகம், மூலம்: இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது ராகுவின் புத்தியோ அந்திரமோ நடந்தால் எதிர்பாராத விபத்து, தொல்லைகள் தரும். சனி, கேது புத்தி அந்திர சூட்சமங்கள் பாதிப்பை தரும் இக்காலங்களில் குல தெய்வ வழிபாடு நவ கிரக ப்ரீதிகள் செய்வது நலம்.

 அவிட்டம், மிருகசீரிஷம், சித்தரை போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது கேதுவின் புத்தியோ அந்தரமோ சூட்சமமோ வந்தால் காரிய கேடு நாசம், செய் தொழில் பாதிப்பு தரும். சனி, ராகு, சூரியன் புத்தி அந்திரங்கள் பாதிப்பை தரலாம். இக்காலங்களில் தானியங்களை தானம் செய்யவும்.

 புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது சனியின் புத்தி, அந்திரம், சூட்சமமோ வந்தால் உயிருக்கு ஆபத்தான காரியங்கள் நிந்தனை படல், காவல் துறையினரால் ஆபத்து அடிதடி வம்பு வழக்கு போன்றவைகளால் பயம் ஏற்படும். மேலே சொல்லப் பட்ட பலன்கள் சூரியன், செவ்வாய் புத்தி அந்திர சூட்சமங்களுக்கும் பொருந்தும். இக்காலங்களில் எண்ணெய், நெய் வஸ்திரம் தானம் செய்தால் தொல்லைகள் விலகும்.

 பரணி, பூசம், பூராடம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரத்தில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது எதிர்பாராத வகையில் பெண்களால் தொல்லை, திருமண காரியம் எதிர்பாராமல் தடைபெறல், ஜலபயம், விஷபயம், கணவன் மனைவி பிரிவினை போன்றவை நடைபெறும். வாகன விபத்தால் ஆயுள் பயம் சனி, சூரியன், செவ்வாய், கேது காலங்களில் மேற்படி பலன்கள் நடைபெறக்கூடும். இதற்கு வஸ்திரம், அன்னம் தானம் செய்வது மிக உத்தமம். திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரத்தில் ஒரு கிரகம் இருந்து கேது புத்தி, அந்திரம்,  சூட்சமம் வரும்போது விஷபயம், காரியகேடு, வாகன விபத்து, எதிரிகளால் வைப்பு, சூனியம், தோஷம், கணவன் மனைவி உறவில் பாதிப்பு அசுப காரியம் நடைபெறும். கர்ப்ப கோளாறு, பிரயாணத்தில் பயம், எதிர்பாராத வம்பு வழக்குகளால் தொல்லை காணும். சனி, ராகு, சந்திர புத்தி அந்திரங்களிலும் மேற்படி பலன்கள் நடைபெறக்கூடும்.

 பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது சனி அந்திரம், புத்தி, சூட்சமம் வரும் போது கட்டுபடல், வதைப்பு, திருட்டு, கற்பழிப்பு, காரிய நாசம் , எக்காரியம் செய்தாலும் பலிதமின்மை, வாகன விபத்து தரும். மேலே சொல்லப்பட்ட பலன்கள் சூரியன், செவ்வாய் புத்தி அந்திரம் சூட்சமம் வரும் போது நடக்கும் கடுமையான பலன்கள் தரும் காலங்களில் நவகிரக ஹோமம், விநாயகர் வழிபாடு அன்னதானம் புண்ணிய தீர்த்தம் ஸ்தல யாத்திரை செல்வது நலம். கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது தசா நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன் புத்தி, அந்திரம், சூட்சமம் வரும் போது யோக பலன்களை விருத்தி செய்யும். சுப பலன்களை தரும் தனவிருத்தி, தொழில் கிடைத்தல் ரோக பயம் விலகல், தெய்வ பலம் கிட்டும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்களுக்கு ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, ஸ்வாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது தசா நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன், புத்தி, அந்திரம், சூட்சமம் வரும் போது யோக பலன்களை விருத்தி செய்யும். சுப பலன்களை தரும். தனவிருத்தி, தொழில் கிடைத்தல், ரோக பயம் விலகல், தெய்வ பலம் கிட்டும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்தரங்கள் ஒன்றில பிறந்தவர்களுக்கு மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசைபுத்தி அந்திர சூட்சமம் காலங்களில் யோக பலன்களை விருத்தி செய்யும். திருமண யோகம், புத்திர பாக்கியம், தனதான்ய சேர்க்கை ஏற்படும். அம்மன் வழிபாடு செய்தால் யோகம் பலம் அடையும்.

 மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு திருவாதிரை, சுவாதி, சதயம், பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசை நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன் புத்தி சந்திர சூட்சமங்கள் வரும்போது நல்ல கால துவக்கம் செய்யும் காரியங்களில் வெற்றியை தரும். தொல்லைகளில் இருந்து விலகும் வாய்ப்பு வரும் குறிப்பிட்ட நட்சத்திரங்களில் வேறு கிரகம் இருந்தால் மத்திம பலனை தரும். முருகன், சிவன், துர்கை வழிபாடு செய்வது யோக பலனை விருத்தி செய்யும். தொல்லைகளில் இருந்து விலகும் வாய்ப்பு வளரும்.

 திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்தவர்களுக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் ஒரு கிரகம் இருந்து திசை நடத்தும் போது புதன் குரு சுக்கிரன் சந்திரன் புத்தி சூட்சம அந்திரங்கள் கண்டிப்பாய் யோக பலன்களை தரும். தொழில் லாபம், எடுத்த காரியம் ஜெயம், பிரயாணம், தூரத்து செய்தி கிடைத்தல், சொத்து சேர்க்கை ஏற்படும், அரசாங்க வகை லாபம் உண்டு.

 புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்தவர்களுக்கு பூசம், அனுஷம், உத்திரட்டாதி, அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது புதன், குரு, சந்திரன், சுக்கிரன், புத்தி, அந்திரம், சூட்சமங்கள் எதிர்பாராத காரிய ஜெயம், யோக விருத்தி, தொழில் பலம் தரும். மகான்கள் தரிசனம், ஸ்தல பிரயாணம், வழக்கு ஜெயம் போன்ற பலன்களை தரும். விஷ்ணு வழிபாடு நலம் தரும்.

 பூசம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் பிறந்தவர்களுக்கு ஆயில்யம், கேட்டை, ரேவதி, பரணி, பூரம், பூராடம், ரோகிணி, அஸ்தம், திருவோணம், திருவாதிரை, சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் ஒரு கிரகம் இருந்து தனது திசை நடத்தும் போது புதன் குரு சுக்கிரன் சந்திரன் அந்திர சூட்சமங்கள் வரும் போது மிக யோக பலன்கள் நடைபெறும். தொழில் பலம் விருத்தி, பதவி உயர்வு, லாட்டரி யோகம், வாகன சேர்க்கை போன்ற பலன்களை தரும். விநாயகர் வழிபாடு செய்வது நலம்.

 ஆயில்யம், கேட்டை, ரேவதி போன்ற நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அஸ்வினி, மகம், மூலம், கிருத்திகை, உத்திரம், உத்திராடம், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ஒன்றில் கிரகம் இருந்து தனது திசையை நடத்தும் போது புதன் குரு சுக்கிரன், சந்திரன் புத்தி அந்திர சூட்சமங்கள் மிக மேலான யோக பலன்களை தராமல் இருக்காது. அரசாங்க வகையில் லாபம், லாட்டரி யோகம், பதவி உயர்வு, இனபந்துக்களால் நன்மை, பூமி சேர்க்கை போன்றவைகளை தரும். விஷ்ணு லட்சுமி துர்கை வழிபாடு புரிவதால் யோகம் பலம் தரும்.

 இதுவரையில் சொல்லப்பட்ட யோக அவயோக பலன்களை லக்னம் அமைந்த நட்சத்திரத்தையும் பிறந்த நட்சத்திரமாக எண்ணி பார்க்கலாம். லக்னம் நின்ற நட்சத்திர அதிபதி சந்திரன் நின்ற நட்சத்திர அதிபதி இருவருள் யார் அதிகம் பலம் பெற்றுள்ளனரோ அவரின் நட்சத்திரத்தை பிறந்த நட்சத்திரமாக கொண்டு பலன் பார்க்கலாம்.

கிரகங்கள் சிறப்பாக அமைந்தும் நல்ல பலன் கிடைக்காமல் போவது ஏன்?

ஜாதகங்களின் பலனை நிர்ணயம் செய்ய முற் படும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

  பிறந்த நட்சத்திரம் – அதனுடைய இயற்கையான குணங்கள் அதில் சுபத்தன்மை எவ்வளவு சதவிகிதம். அந்த நட்சத்திரம் அமைந்திருக்கும் இராசி. அதன் இயற் தன்மைகள். ஆண் ராசியா? பெண் ராசியா, சரமா, ஸ்திரமா, உபயமா, ஜாதக ரீதியாய் அந்த ராசி அமைந்த பாவம். அந்த பாவத்தின் காரக தன்மை. நைசர்க-சுப ராசியா, அல்லது பாவர் ராசியா போன்றவை மனதில் ஓட வேண்டும்.

 அடுத்ததாக.

லக்னம் முதல் 9 கிரகங்களும் அமைந்துள்ள நட்சத்திரங்கள் அது அமைந்துள்ள ராசிகள். ஜாதக ரீதியாய் கிரகங்கள் அமைந்துள்ள பாவங்கள் போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும். அப்படி நாம் பார்க்கும் போது கிரக காரகம், பாவ காரகம் எந்த நிலையில் இணைந்தும் எந்த நிலையில் இணையாத தன்மையிலும் உள்ளது என்பதை அறிய வேண்டும்.

 அடுத்ததாக நடப்பு திசா புத்தி தன்மைகளை அறிய வேண்டும். எப்படியென்றால் திசாநாதன், நைசர் சுபனா, அசுபனா, லக்ன ரீதியாய் அசுபனா-சுபனா, லக்ன ரீதியாய் எந்த பாவத்தில் அமைந்துள்ளார், அந்த பாவ கிரகங்கள் என்ன? திசா நாதனின் காரகம் என்ன? யார் நட்சத்திரத்தை பெற்று திசை நடத்தும் திசா நாதன் உள்ளார்.

 அந்த நட்சத்திர அதிபதிக்கும் திசா நாதனுக்கும் உள்ள உறவின் நிலை. திசா நாதனுக்கு திசா நாதன் நிற்கும் நட்சத்திர அதிபதி நிற்கும் ஸ்தானம் கோணமா-கேந்திரமா-பணபரமா-ஆபோக்கிலியமா அந்த நட்சத்திர அதிபதியின் காரகத்துவங்கள் என்ன? நட்சத்திர நாதனின் பிற நட்சத்திரங்கள் அமைந்துள்ள பாவங்கள். லக்ன ரீதியாய் அந்த பாவங்களின் காரகத்துவங்கள் அந்த பாவம்

அமைந்துள்ள ராசியின் இயற்கையான தன்மைகள் போன்றவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

 இவை மட்டுமல்லாமல் கிரகங்கள் பெற்று இருக்கும் எதிரிடை சாதக தாரை தன்மைகள். காரகன் பாசகன் போதகன் வேதகன் விவரம் போன்றவற்றை மனதில் கொண்டே நாம் பலன் நிர்சயிக்கவும்

பலன் கூறவும் முற்பட வேண்டும்.

இனி இந்த விதிகளை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம்:

பிறந்த தேதி: 29-01-1959 – பிறந்த நேரம்: 4.46 பிற்பகல் – பெண் பிறந்த இடம்: கரூர்

கிரங்கள்  பாகை  கலை  ராசி   நட்ச.  பாதம்       நட் அதிபதி
சூரியன்     15               31        மகரம்  திருவோணம்   2      சந்
சந்                  15               07       கன்னி   அஸ்தம்                  2      சந்   
செவ்            01              50      ரிஷபம்  கார்த்திகை          2     சூரி         
புதன்           04               49     மகரம்     உத்திராடம்           3      சூரி         
குரு             05               15     விருச்     அனுஷம்                 1     சனி
சுக்கிரன் 04               25      கும்பம்   அவிட்டம்               4   செவ் 
சனி            09                20      தனுசு       மூலம்                      3      கேது
ராகு         23                15     கன்னி     அஸ்தம்                    4       சந்         
கேது      23                  15     மீனம்       ரேவதி                        2      புதன் 
லக்னம்  24               49    மிதுனம் புனர்பூசம்               2        குரு              

தைதுல கரணம்-சுகர்மன் யோகம்-வியாழக்கிழம்-26.03.90 முதல் 26.03.2006 வரை குரு திசை

ஜாதகி பிறந்த நட்சத்திரம் அஸ்தம். இதன் குணங்கள்:

முழு நட்சத்திரம்-தேவகணம் ஜல நாள் துரித நாள் அதி தெய்வம் சாஸ்தா. எல்லா வித சுப காரியங்களுக்கும் உகந்த நட்சத்திரம். நட்சத்திர தோஷம் குறைவு. சுபதன்மை அதிகம் உள்ள நட்சத்திரம். எனவே நல்லது. அமைந்திருக்கும் ராசி கன்னி. இரட்டை படை ராசி, பெண் ராசி.

எனவே இதுவும் நல்லது. நைசர்க சுப வரிசையில் புதனும் வருவதால் வெற்றி லாபம் இயல்பாய் கிடைக்கும். கால புருஷனுக்கு 6ம் இடமாய் வருவதால் அதன் காரகத்துவங்களான கணவனை பிரிதல், நோய், எதிரிகள் போன்றவற்றை அங்கு அமர்ந்த கிரகங்களை கொண்டும் காரக கிரகங்களின் வலிமை அது அமர்ந்த பாவம் முதலியவற்றையும் கொண்டு அறிய வேண்டும். இவற்றையெல்லாம் பார்க்கும் போது மேலோட்டமாக நட்சத்திர ராசியை கொண்டு ஜாதகம் நல்ல

ஜாதகம் என்ற முடிவிற்கு வரலாம்.

 அடுத்ததாக லக்னம் முதல் கிரகங்கள் அமைந்துள்ள நிலைகளை ஆராய்வோம், லக்னம், மிதுனம், ஆண் ராசி, அதிபதி புதன் ராசி அதிபதியே லக்ன அதிபதியாய் வருவது சிறப்பே. லக்னம் அமைந்த நட்சத்திரம் புனர்பூசம் 2ம் பாதம். அதன் அதிபதி குரு. குரு லக்னத்திற்கு 7.10க்கு உடையவர்.

 ராசிக்கு 7.4க்கு உடையவர். உபய ராசி, லக்கனத்தாருக்கு சப்தமாதிபதி, மாரகாதிபதி என்றும் விதியை மனதில் கொண்டு, மாரகாதியின் நட்சத்திரத்தில் லக்னம். எனவே லக்ன பாவ பலன் சிறிது குறைகிறது. லக்னாதிபதியின் எதிரிடையில் லக்னம் அமையவில்லை. ராசியும் அமையவில்லை. இது

சிறப்பான நிலை. எந்த சூழ்நிலையிலும் தன் சுயதிறம், கௌரவம் பாதிக்காது என்பதை இது காட்டுகிறது. வாழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்க கூடிய திறனும்-சூழ்நிலையும் இயல்பாய் ஏற்படும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. இந்த நிலை மிக நல்லதே.

 லக்னாதிபதி ராசிக்கு கோணத்தில் அமைந்தது மிக சிறப்பு. ஆனால் லக்னாதிபதி லக்னத்திற்கு 8ல் நின்றது சிறப்பில்லை. எட்டில் சமம் என்ற நிலையில் நிற்பதும் பெரிய அளவில் நல்ல விஷயம் இல்லை. லக்னாதி-மூன்றாமாதியுடன் இணைந்து 8ல் நிற்பது. பலவீனமான விஷயமே. ராசி ரீதியாய் விரயாதிபதியுடன் இராசியாதிபதி இணைந்து 5ல் நிற்பது தோஷமே. குழந்தைகள் அற்பம்.

புத்திர சோகத்திற்கு ஆளாக வேண்டிவரும் என்பதை இது உணர்த்துகிறது. இது எப்போது ஏற்படும் என்பதை பிறகு ஆராய்வோம். லக்னத்திற்கு சுப திருஷ்டி இல்லை. ராசிக்கும் இல்லை. இதுவும் பலவீனமான நிலையே.

 இனி காரக கிரகங்கள் காரக பாவத்திற்கும் லக்னத்திற்கும் அமைந்துள்ள நிலைகளை பார்ப்போம். பிதா காரகன், சூரியன், பிதா பாவத்திற்கு 12ல் இது இக்குழந்தை பிறந்தபின் பிதாவிற்கு க்ஷணநிலை ஏற்படும் என்பதை காட்டுகிறது. லக்னத்திற்கு எட்டில் பிதாகாரன் மேற்கூறிய பலனை மேலும்

உறுதிப்படுத்துகிறது.

 லக்னாதிபதியும்-சுகாதிபதியும் இணைந்திருந்தாலும் நைசர்க்க பலத்தில் வலுவாய் உள்ள சூரியன் தனது பலத்தை பிதா ஸ்தான ரீதியாய் இழந்திருப்பது சிறப்பில்லை. அது மட்டுமல்ல, வீடு கொடுத்தவன் அதற்கு 12ல் நிற்பது பலவீனமான நிலையையே சுட்டி காட்டுகிறது. மாதா காரகன்: மாதாஸ்தானமாகிய 4ம் இடத்தில் ஏறி நிற்பது சிறப்பு.

 ஆனால் லக்னத்திற்கு நாலில் அது அமையும் போது காரகோ பாவ நாஸ்தி என்ற வசனப்படியும் நாலில் ராகுவுடன் இணைந்து மாதா காரகன் நிற்பதாலும் அந்த ஸ்தானத்திற்கு சுப திருஷ்டி எதுவும் இல்லாததும் குழந்தைக்கு பாலாரிஷ்ட தோஷமும் தாய்க்கு சில தோஷங்களையும் உறுதிபடுத்துகிறது.

 சகோதர காரகன்: செவ்வாய் சகோதர கார பாவத்திற்கு கேந்திரம் ஏளி நிற்பதும் குருவால் பார்க்கபடுவதும் விஷேசமே. இது இவருக்கு சகோதரன் உண்டு என்பதையும் அதனால் இவருக்கு பயனும் உண்டு என்பதையும் தெளிவாக்குகிறது.

 சகோதர காரகனாகிய செவ்வாய் லக்னத்திற்கு 6.10க்கு உடையோன் ஆகி 12ல் நிற்பது தோஷம் சிறிது காட்குகிறது.

 வித்யா-மாமன் காரகனாகிய புதன் வித்தை ஸ்தானத்திற்கு கோணம் ஏறி நிற்பது வித்தை பலம் உண்டென்பதை புலப்படுத்துகிறது. அது மட்டுமல்லாமல் சூரியனுடன் இணைந்து நிபுணயோகமும் பெற்றிருப்பதால் வித்தையால் கீர்த்தியும் ஜன சமூகம் மதிக்கதக்க வித்தை பலம் உண்டென்பதை

உறுதிபடுத்துகிறது. லக்னத்திற்கு எட்டில் நிற்கும் புதன் வித்தையில் சில தடங்கல்களை தந்தாலும் மறைந்த புதன் நிறைந்த பலனை தருவான் என்ற நியதிப்படி மேன்மையான வித்தையுண்டாகும் என்பதை நமக்கு தெரிவிக்கிறது.

 புத்திர காரகன் குரு புத்திரஸ்தானத்திற்கு இரண்டில் இருப்பது விஷேசமே. புத்திர விருத்தியையும் புத்திர லாபத்தையும் இது குறிக்கிறது. ஆனால் ராகுவின் பார்வையிருப்பதாலும் லக்னத்திற்கு 6ல் இருப்பதாலும் புத்திரரால் மன கஷ்டம் சூழ்நிலை உருவாவதையும் புத்திரரை பிரிந்து இருக்க வேண்டி சூழ்நிலை ஏற்படும் என்பதையும் நமக்கு தெரிவிக்கிறது.

 புத்திர ஸ்தானாதிபதி சுக்கிரன் களத்திரஸ்தானத்திற்கு 3ல் நிற்பது வெகு சிறப்பே. அதுமட்டுமல்லாமல் லக்னத்திற்கு 9ல் இருப்பது களத்திரனால் அதிக அளவு பாக்கியம் கைகூடும் என்பதை நமக்கு அறிவிக்கிறது. அவரே 12ம் மாதியாகவும் வருகிறார். 12ம் இடத்திற்கு 10ம் இடத்தில் இருப்பதால் மேலும் சிறப்பே.

 ஆயுள்காரகன் சனி பகவான் ஆயுள் ஸ்தானத்திற்கு 12ல் இருப்பது நல்லது. எப்படி என்றால் நைசர்க பலம் பெற கூடாது என்ற விதிப்படி லக்னத்திற்கு 7ல் நிற்கும் சனி பகவான் கண்டக சனி எனும் பெயர் பெறுகிறார். செவ்வாயின் திருஷ்டி சனிக்கும்-சனியின் திருஷ்டி லக்னத்திற்கும் விழுவது சிறப்பில்லை. சனி பகவான் பார்க்கும் இடம் ஷீண்ப்படும் என்ற விதிக்கு ஒப்ப லக்ன பலன்கள் ஷீணமடைவதை உறுதி செய்கிறது.

 இப்படியெல்லாம் கிரக காரகம் பாவ காரகம் போன்றவற்றை மனதில் கொண்டு வந்திருப்பவர் எந்த நோக்கத்திற்கு வந்திருக்கிறார் என்பதையும் அறிந்து அது ரீதியில் நாம் பின் செல்ல வேண்டும்.

 வந்திருப்பவர் ஜாதகியின் திருமணம் பற்றி அறிய விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அதில் என்னென்ன உப விஷயங்கள் இருக்கிறது என்பதை குறித்து கொண்டு பின் பலன் பகுதிக்கு செல்ல வேண்டும்.

 இந்த ஜாதகிக்கு திருமணம் உண்டா? உண்டு என்றால் எந்த வயதில் வரன் அமையும் திசை வரனின் நிறம், தொழில் போன்றவை வரனின் உடன் சிறந்தோர் நிலை. இந்த விஷயங்களை கொண்டு பலன் கூற வேண்டும். இந்த விஷயங்களை நாம் அறிய வேண்டுமெனில் திசா புத்தி, காரக கிரகம். காரக பாவம், லக்னம் போன்றவற்றை ஆராய வேண்டும். அப்படி ஆராயும் போது லக்னத்திற்கு 7ல் சனி. ராசிக்கு 7ல் கேது இரண்டும் குரு வீட்டில்-குரு லக்னத்திற்கு 6ல் ராசிக்கு 3ல்

 சயன சுக காரகம் பெற்ற 12ம் இடத்தில் செவ்வாய் அந்த வீட்டின் அதிபதி களத்திர காரகனாக அமைந்து பாக்கியத்தில் அமர்திருப்பதால் இந்த ஜாதகிக்கு களத்திர பாக்கியம் உண்டு என்பதை நிரூபிக்கிறது. எனவே நாம் ஜாதகிக்கு திருமணம் உண்டு என்பதை கூற வேண்டும்.

 அதன் பின் எப்போது என்று கூற வேண்டும் அதாவது திருமண காலம்.

 ராகு திசையில் சுக்கிர புத்தி காலம் திருமணம் நடைபெறும் என்று கூறலாம். அதாவது 24வது வயதில் ராகு திசை சுக்கிர புத்தி காலம் 13.10.83 முதல் 13.10.86 வரையுள்ள காலம் திருமண காலம்.

 அதாவது கோசாரத்தில் சப்தமாதிபதி சப்தமஸ்தானத்தை தொடும் காலம் 12ம் இடத்தில் இருக்கும் கிரகம் சப்தமஸ்தானத்தை தொடும் காலம் களத்திர காரகன் தொடும் காலம் போன்றவற்றை மனதில் கொண்டு 25 வயதில் திருமணம் நடைபெறும் என்று கூற வேண்டும்.

 அடுத்து வரன் அமையும் திசை சப்தமாதிபதி குரு அவரின் திசை வடக்கு அடுத்து கால புருஷ ரீதியாய் சப்தமஸ்தானம் அமையும் திசை சப்தம ஸ்தானம் தனுசு எனவே வடமேற்கு எனவே இந்த ஜாதகம் பொருத்தமட்டில் வடமேற்கு வடக்கு போன்ற திசைகளில் இருந்து வரன் அமையும். சப்தமாதி 6ல் உள்ளதாலும் சப்தமஸ்தானத்தில் சனி இருப்பதாலும் சொந்தத்தில் திருமணம் இல்லை என்று உறுதியாய் சொல்லலாம்.

 அது மட்டுமல்ல சப்தமஸ்தானத்தில் இருந்து களத்திர காரகன் 3ல் அமைவதால் சுய ஊரில் வரன் அமையாது குறுகிய தூர பிரயாண இடத்தில் வரன் அமையும் என்றும் சொல்ல வேண்டும்.

 அடுத்து வரனின் குணம்:

சப்தமாதி குருவாக வருவதால் – மேன்மையான குணமும் நல்ல குடும்பத்தில் பிறந்தவராகவும் மேதா விலாசமும் கூர்மையான அறிவும் படிப்பினால் அந்தஸ்து உடையனாகவும் இருப்பார் என்றும் சொல்லலாம்.

 சப்தமாதிக்கு 11ல் இரண்டு கிரகமும் 3-8 இரண்டு கிரகங்களும் இருப்பதால் நிச்சயமாக வரன் தலைப்பிள்ளையாய் அமையாது என்றும் மேலும் கீழும் சகோதர சகோதரியர் உண்டு என்றும் திட்டவட்டமாக கூறலாம்.

 சப்தமாதிக்கு 10ம் இடம் சிம்மம் அதன் அதிபதி சூரியன் அதனுடன் இலக்னாதிபதி எனவே வரன் சுய தொழில் செய்பவராகவே இருப்பர், சுய வியாபாரம் செய்வார். அரசு தொடர்பும் உண்டாகும். ஆனால் அரசாங்க வேலையில் இருக்க மாட்டார். காண்ட்ராக்ட் போன்ற தொழில் செய்பவர் என்று கூறலாம்.

 இப்படியாக ஒரு ஜாதகத்தை எடுத்தவுடன் அதன் நிலைகளை மனதில் கொண்டு அறிய வேண்டிய விஷயத்தையும் மனதில் கொண்டு அதனுடைய காரக பாவங்கள், காரக கிரகங்கள் போன்றவற்றை அறிந்து அதன் பலம் பலவீனம் அறிந்து நாம் சொன்னால் வந்திருப்பவரை சந்தேகத்திற்கு இடமில்லாமல் அவரின் சஞ்சலம் தீர்த்து சந்தோஷமாய் அனுப்பலாம். அதற்கு உண்டான அனுபவம் திறமை, பொறுமை முதலியவற்றை குருவின் மூலமும் திருவின் மூலமும் பெற்று ஜோதிட கலையை உலகிற்கு அளித்த முன்னோர்களை வணங்கி பலன் சொல்வோமானால் எல்லாம் நன்மையாய் முடியும் என்று கூறி அடுத்து  சந்திப்போம் என்று கூறி விடை பெறுகிறேன்.

ஜோதிடம்

  ஜோதிடம்  ஒர் அறிமுகம்

மனிதர்களாய் பிறந்த அனைவக்கும் அடுத்த வினாடி முதல் அடுத்த ஜென்மம் வரை என்ன நடக்கும் எப்படி எப்படி நடக்கும், எப்போது நடக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆவல் இருப்பது இயற்கையே. இந்த ஆவலை பூர்த்தி செய்ய உள்ள கலை ஜோதிட கலை மாத்திரமே. வேறு கலைகள் மூலம் இருக்கும் இருப்பில் சந்தோஷப்படலாம் அல்லது சங்கடங்களை தற்காலிகமாய் குறைத்துக் கொள்ளலாம், உதாரணமாக சோகமாக இருக்கும் போது ஆடல், பாடல் மூலம் சோகத்தை குறைத்துக் கொள்வது போல். ஆனால் ஜோதிடத்தின் மூலம் நீ சோகமாய் இருப்பாய், ஆடல், பாடல் மூலம் உன் சோகத்தை குறைத்துக் கொள்வாய் என சொல்ல முடியும். இது தான் ஆய கலைகள் அறுபத்து நான்கிலும் ஜோதிடம் தனியிடத்தை பெற்றுள்ளதற்கு காரணம். அதனால் தான் எந்த ஒரு விஷயத்திலும் பூரித்து புளகாங்கிதம் அடையும் நம் முன்னோர்கள் ஜோதிடத்தை வேதத்தின் கண்ணாகவே போற்றி மகிழ்ந்தனர்.

 ஜோதிட சாஸ்திரம் மக்களுக்கு பல பல விஷயங்களில் முடிவு எடுக்க ஒரு நல்ல சாஸ்திரம். எந்த முடிவு எடுப்பது என்று பல நிலைகளில், பல சமயங்களில் நாம் தவிக்கும் போது நமக்கு கை கண்ட விளக்காய் இருப்பது இந்த சாஸ்திரம் மட்டுமே. வேறு எந்த சாஸ்திரத்தின் மூலமும் இதை அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான் ஜோதிடம் இன்று வரை மக்களிடையே இருக்கிறது. இங்கு நாம் முக்கியமாய் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.

 ஜோதிடம் என்பதும், ஜோதிடர் என்பதும் வேறு வேறு.

 

இதன் இரண்டிலும் உள்ள வித்தியாசம் தெரியாததால் தான் மக்கள் ஜோதிடத்தை மறுக்கின்றனர் அல்லது வெறுக்கின்றனர்.

 இயற்கையின் தன்மையில் ஏற்படும் மாறுதல்கள் மனிதர்களை பாதிப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். சித்திரை மாதத்து வெயிலின் கொடுமை அறிந்தவர்கள், மார்கழி மாதமே சிறந்தது என்று சொல்லுவார்கள். சித்திரையில் சூடு அதிகம். வெப்பத்தின் நிலையில் நீர் நிலைகளில் நீரின் அளவு குறையும். இது அனுபவம். வழி வழியாய் நம் முன்னோர்கள் சொல்லி நாமும் அனுபவித்து நம் பின் உள்ளவர்களுக்கு கூறுகிறோம்.

 இது போலத் தான் ஜோதிடமும் கிழமை-திதி-நட்சத்திரம்-கிரகங்கள்-கிரகங்களின் இணைவுகள் கொண்டு இவைகள் இப்படி இருந்தால் இப்படி நடக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தள்ளார்கள்.

 இது கணித சம்பந்தபட்ட விஷயம், கணிதத்தின் மூலம் அமாவாசை-பௌர்ணமி-கிரஹண காலம் போன்றவற்றை அறிவது போலவே ஒவ்வொரு மனிதருக்கும் நடக்கும் விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பதை சொல்வது தான் ஜோதிட சாஸ்திரம்.

 மனிதருக்கும் விண்ணில் இருக்கும் கோள்களுக்கும் உள்ள தொடர்பை அறிந்து அதன் மூலம் மனிதர்கள் அடையும் நன்மை, தீமைகளை வரையறுத்து சொல்வதற்கு உண்டான கலை ஜோதிட கலை மட்டுமே.

 ஜோதிட கலைக்கு பல முகங்கள் உண்டு. நாட்டு ஜோதிடம், வீட்டு ஜோதிடம், கர்ம ஜோதிடம் இப்படி இன்னும் பற்பல வகை உண்டு, அவைகளை அவ்வப்போது பார்க்கலாம். ஜோதிடம் என்பது அடிப்படையில் கணிதம் சம்பந்தப்பட்டது. அதனால் இது அறிவியல் என்று சொல்வது முற்றிலும் உண்மை.

 பூமியின் இயக்கம் மற்ற கிரகங்களின் சலனங்கள் போன்றவற்றை கணிதத்தின் துணை கொண்டு தான் துல்லியமாய் அறிய முடியும். இப்படி துல்லியமாய் அறிந்த பின் பலன் சொல்ல வரும் போது ஜோதிடம் வேறு ஒரு நிலைக்கு நகர்ந்துவிடுகிறது. கணிதம் கடந்து பலன் சொல்பவரின்-ஒழுக்கம்-இறைபக்தி-குரு பக்தி-குல தெய்வ ஆராதனை-இஷ்ட தெய்வத்தின் வரம் போன்றவற்றை கொண்டே பலன்கள் நடப்பதும், நடக்காமல் போவதும் உண்டாகிறது.

 ஜோதிடர் மேற் சொல்லிய விஷயங்களை அனுபவத்தில் கொண்டவராக இருந்தால் கணிதத்தில் ஏதாவது காரணத்தால் தவறு ஏற்பட்டிருந்தாலும் கூட பலன்கள் சரியாக வரும், இது அனுபவம். அப்படி இல்லாத போது ஜோதிடம் தலை குனிவதை தடுக்க முடியாது. அப்படி தலை குனிய ஜோதிடம் காரணம் அல்ல.

 ஒரு நாள் என்பது 60 நாழிகைள் அல்லது 24 மணி நேரங்கள் கொண்டது. சூரியனுடைய நகர்தலே நாளின் அடிப்படை அதனால் இந்திய ஜோதிடம் சூரிய உதயம் முதல் மறு சூரிய உதயம் வரை உள்ள கால பகுதியையே ஒரு நாள் என கணக்கில் கொண்டது. நாட்கள் காலத்தோடு தொடர்பு உடையதால், மனிதனும் காலத்தோடு மிக நெருங்கிய தொடர்பு உடையவனாக இருக்கிறான். சுழலும் கோள்களின் தாக்கம் காலத்திற்கு ஏற்படும் போது காலத்தோடு தொடர்பு உடைய மனிதனும் அதனுடைய நிலைகளை அனுபவிக்க வேண்டியவனாகிறான். பனி காலத்தில் குளிரின் கடுமையால் மனிதன் கம்பளியை தேடுவது அதனால் தான். கடும் வெயில் காலத்தில் பருத்தி ஆடையை அணிவதும் அதனால் தான். காலத்தின் சுழற்ச்சிக்கேற்ப மனிதன் தான் வாழும் முறையை இயற்கையோடு ஒட்டி அமைத்துக் கொண்டுள்ளான், காலத்தை விட்டு அவனால் வெளியே செல்ல முடியாது, காலமும் அவனை வெளியே விடாது.

 காலம் செயல்படும் விதத்தினை ஒருவாறு அறிந்து கொள்ள வானியல் சாஸ்திரம் நமக்கு நன்கு உதவும். காற்று காலத்தில் பஞ்சு விற்க செல்ல கூடாது – மழை காலத்தில் உப்பு விற்க செல்லக் கூடாது. இதை நம் முன்னோர்கள் அனுபவத்தின் மூலம் பழமொழியாகவே சொல்லி வைத்திருக்கின்றனர்.

 அந்த காலங்களில் பிராயணம் என்பது அதுவும் தொலை தூர பிராயணம் என்பது நிரம்ப சிக்கலான விஷயம். அந்த காலங்களில் நாள் – வேலை – நட்சத்திரம் பார்த்தே பிராயணம் தொடங்குவார்கள். பிராயணம் செய்பவர்கள் நல்லபடியாய் வீடு திரும்ப காலத்தின் துணை மிக மிக அவசியம் என்பதை நம் முன்னோர்கள் மிக நம்பினார்கள். அது அவர்களுக்கு பலனையும் தந்தது. அது இப்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறதா என்று பார்த்தால் பெருமளவு குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும், காரணம் பிராயணம் எளிமையாகிவிட்டது. சுமார் 2000 கிலோ மீட்டரை கடக்க 4 மணி நேரமே போதும் எனும் நிலை இப்போது. பண்டைய காலத்தில் இப்படியில்லையே. நம் இப்போதைய நிலையில் 4 மணி நேர கால நிலைகளை கணக்கில் கொண்டால் போதும், பண்டைய காலத்தில் 1 வருட கால நிலைகளை கணக்கில் கொள்ள வேண்டிய நிலை. அதனால் பிராயணத்திற்க்கு நல்ல நேரம் அன்று தேவைப்பட்டது, இன்று அதன் தேவை அதனளவில் குறைந்துவிட்டது. எப்படியானாலும் காலத்தின் நிலையறிந்து மனிதன் செயல்பட்டால் வாழ்க்கைப் பிராயணம் நல்ல பல பலன்களோடு சந்தோஷமாய் செல்லும்.

 அதற்கு வழி கூறுவது ஜோதிடம், நல்ல நாளையும், நேரத்தையும் நமக்கு அறிவிப்பது ஜோதிடம். ஜோதிடம் எல்லா பிரிவினர்க்கும் பயன்படக் கூடியது.

 அறம், பொருள், இன்பம், வீடு எனும் புருஷார்த்தங்களை மனிதன் பெறுவதற்க்கான வழி வகைகளை போதிக்கும் இந்து மத தத்துவங்களுக்கு ஆதாரமாக இருப்பது வேதங்களாகும். அதனுடைய காலமோ — வேதத்தின் கண்ணாக ஜோதிடத்தை சிறப்பிப்பதால் இதனுடைய காலமும் அந்த அளவு பழமையானது ஆகும்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் என்கின்ற விதி தொன்னூறு சதவிகிதம் இதற்கு ஒத்துவராது. ஏனென்றால் இதிலுள்ள விஷயங்கள் அனைத்தும் முக்காலங்களையும் அறிந்தவர்களால் அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் அதிகஅளவு பிரயாசைப் பட தேவையில்லை.

 இந்தளவு பெருமை மிக்க ஜோதிட விஷயங்களை தொடர்ந்து நாம் பார்க்கலாம்.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com