சத்சரிதம் என்றால் என்ன.
சாய்பாபா வாழ்ந்த காலத்தில் இருந்த அவருடைய பக்தர்கள், தாங்கள் சாய்பாபாவிடம் அனுபவித்த நிகழ்ச்சிகளை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டது.
சாயி சத்சரிதத்தில் ஒரு அத்தியாயம் துவங்கும் பொழுது இதற்கு முன் ஒரு ஞானியை பற்றி கூறப்பட்டுள்ளவைகளை முன்னுரையாக கூறிவிட்டு பின்னர் அந்தந்த நிகழ்ச்சிகளை அப்படியே கூறுவார்கள் இதைப் பார்க்கும்போது ஒரு நிகழ்ச்சியை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்று நமக்கு எளிமையாக அது நம்மை படிப்பிக்கும்.
சீரடிக்கு ஒருவன் பாபாவை பார்க்க செல்கிறான் நானும் பாபாவை பார்க்க செல்கிறேன் என்றால் நானும் அவனும் ஒன்று என்ற மனப்பான்மை முதலில் வரவேண்டும் பின்னர் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் போது அவர்களுடைய நம்பிக்கையை மேலும் வலுப்படும். இது எப்படி என்றால் நம் நாட்டில் ஒரு தீவிரவாதி குண்டு வைக்கிறான் என்றால் வேறு நாட்டில் குண்டு வைத்தும் தீவிரவாதி அவனை தன் இனத்தை சேர்ந்தவனாகவே அவனை பார்க்கிறான், தன்னுடைய ரத்த சொந்தங்களை விட அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறான்.
முதலில் ஒவ்வொரு விஷயத்தையும் நாம் ஆழ்ந்து கவனித்து சிந்திக்க வேண்டும் அதுகுறித்து நமக்கு நாமே பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது தான் ஒரு முன்னேற்றம் நமக்கு ஏற்படும்.
கருணாநிதியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அயராத இலக்கு நோக்கிய உழைப்பு. அந்த உழைப்புக்கு நாம் எப்போதுமே தலை வணங்க வேண்டும். சிஸ்டம் பிரகாரம் இருக்கிற உழைப்பு, இலக்கு மாறாத உழைப்பு, எல்லா வினாடியும் சிந்தித்தல் தன்னைப் பற்றி மட்டுமே சிந்தித்தல். அதில் தவறு கிடையாது எதைப்பற்றியுமே சிந்திக்காமல் இருப்பதற்கு பதில் தன்னை பற்றியாவது சிந்தித்தல் நல்லதே.
அப்துல் கலாம் அவர்களை பார்த்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது உழைப்பு. ஐந்தாவது படிக்கும் வயதில் அவர் பேப்பர் போட சென்றுவிட்டார், அப்படி சென்றால் தான் படிக்க முடியும். ஆனால் நாமோ சோம்பேறித்தனமாக இருக்கிறோம் நாம் பேப்பர் போடத் தேவையில்லை ஆனால் குறைந்தபட்சம் காலையில் சீக்கிரம் எழுந்து எழுந்து உடற்பயிற்சி செய்யலாம், நாம் செய்யாமல் காரணம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.
அவரைப்பற்றிய புத்தகத்தை முழுமையாக கூட நாம் படிக்க வேண்டியதில்லை இரண்டாவது பக்கத்தை படித்தாலே அதற்கு மேலாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு குறைந்தபட்சம் ஒரு நான்கு மணி நேரமாவது நாம் சிந்திக்க வேண்டியிருக்கும். திரு கலாம் அவர்கள் ஒரு விஞ்ஞானி மட்டுமல்ல அவர் ஒரு ஞானியும் கூட அவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை பல விஷயங்கள் உண்டு.
ஒரு மனிதன் என்றால் அவனுக்கு ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும் தனித்தன்மையுடன் ஒரு சிஸ்டமும் இருந்தால் அது தான் சிறப்பு.
அவுரங்கசீப் ஒரு பேரரசனாக பிறந்த போதும் இருந்தபோதும் தன்னுடைய கடமைகளை செய்ய தவறியதில்லை ஐந்து வேளைகள் ஒரு நாளைக்கு தொழுவதாக இருந்தாலும் அல்லது தன்னுடைய தொப்பியை தானே தைப்பது ஆனாலும் அவர் வாழ்ந்து காட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் திரு கலாம் பற்றி கூறும்போது ஒரு விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும்போது ஒரு ராக்கெட் ஏவுவது என்றால் அதற்கு பல்வேறு கிரகங்களின் சுழற்சி இன்னும் பிற பிற விஷயங்களை கணக்கில் கொண்டு நேரம் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகு ஒவ்வொரு நாளுக்கும் ஒரு டார்கெட் ஒன்று உண்டு அதை பெரும்பாடுபட்டு சரியாக அவர்களது குழு சரியாக செய்து முடிக்கும் செய்து முடித்துவிட்டு அந்த வெற்றியைக் கூட அவர்கள் கொண்டாட முடியாது. ஏனென்றால் அந்த வேலை முடிந்துவிட்டது ஆனால் அடுத்த நாளைக்கு உண்டான வேலை ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டு உள்ளது. இந்த விஷயம் இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு புரிவதில்லை நீ தவற விடுகிற ஒவ்வொரு வினாடியும் உனக்கு முன்பாக பல லட்சம் பேர் சென்று கொண்டிருக்கிறார்கள்.
சின்ன சின்ன வார்த்தைகளிலிருந்து ஒவ்வொரு விஷயத்தையும் சிந்திக்க வேண்டும் அப்படி சிந்திக்கும் போது உனக்குள்ளேயே ஒரு மாற்றம் உண்டாகும். கற்பனையிலேயே இருக்க வேண்டும் அதனால் எந்த பலனும் இல்லை எதார்த்தத்தில் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
நாம் பார்த்து மிரட்சி அடைய வேண்டும் இருக்கக்கூடிய நபர்கள் பலர் அதில் முதன்மையானவர் வேறு யாரும் அல்ல நாமேதான். ரா. கணபதி அவர்களின் எழுத்தாற்றல் மிகவும் சிறப்பான அவர் எழுதிய ஆத்ம தாரகை என்னும் நூல் மிகவும் சிறப்பானது அது படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக உள்ளதுபோல தோன்றும். இயல்பாக படிப்பதில் நாட்டம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நூல்களை படிக்க முடியும். அதில் ரமணர் பற்றி அரவிந்தரை பற்றி ஒரு யாத்ரீகன் பேசுவதைப் போல இருக்கும். நான் சவால் விடுகிறேன் என்று அந்த மகானிடம் அந்த நபர் கூறுவார் அந்த மகானுக்கு வார்த்தை விளையாட்டு களில் எல்லாம் விருப்பம் இல்லை அவர் கேட்பார் ஆமாம் நான் என்று சொல்கிறாயே அந்த நான் யார்.
சுப வீரபாண்டியன் புனிதமும் தீட்டும் அப்படி ஒரு தலைப்பில் பேசும்போது கங்கையை பற்றிக் குறிப்பிடுவார் நதிகளிலே ஆறாவது மிகவும் அசுத்தமான புனித கங்கை ஆகும் என்று கூறுவார். கங்கை நதி மட்டுமே எலும்பையும் கரைக்கக்கூடியது அதனால் தான் நமது முன்னோர்கள் அஸ்தியை கங்கையில் கரைக்க நம்மிடம் கூறியுள்ளனர்.
ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் ஒரு சமயம் சிந்தனையில் இருந்த போது அவரது நண்பர்கள் கவலைப்பட வேண்டாம் கடவுள் உங்கள் பக்கம் இருக்கிறார் என்று கூறினார்கள். அதற்கு லிங்கன் நான் கடவுள் இருக்கும் பக்கம் நான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று அவர்களிடம் கூறினார், இதுதானே தீர்க்கமான சிந்தனை. நான் தப்பு பண்றப்போ கடவுள் என்னை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணாமல் நான் சரியான மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தானே உயர்வு.
உன்னுடைய வினை மட்டுமே உன்னுடைய செயலாக்கத்திற்கு காரணம் உன்னுடைய செயலாக்கம் மட்டுமே உன்னுடைய வினையை மாற்றும். கலாம் அவர்கள் சொல்வது போல you cannot change your fate but you can change your habits. If you change your habits everything will change. உனக்கு கீழே வேலை செய்பவர்களிடம் கழுதை மாதிரி கத்திக்கொண்டே இருந்தால் யாரும் உன்னுடன் வேலை செய்ய மாட்டார்கள். அதற்கு பதில் அவர்களுக்கு புரிவது போல சரியாக எடுத்துக் கூறினால் அவர்கள் உன்னிடம் வேலை செய்வார்கள்.
நீ தான் மாற வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சூழ்நிலை மாறாது. நான் இப்படித்தான் என்று கூறினால் நீ மட்டும் தான் நின்று கொண்டு இருப்பாய். நீ இந்துவாய் இருந்தால் கர்ம பலனை நம்பியே ஆகவேண்டும், நீ இந்துவாய் இருந்தால் போன ஜென்மம் அதற்கு முந்தைய ஜென்மம் என்பதை நம்பியே ஆகவேண்டும், அப்படி நம்பும் போது எல்லாவற்றுக்கும் காரணம் நீயே என்று நம்பித்தான் ஆகவேண்டும். அப்பொழுது அனாவசியமாக அடுத்தவர்களை நாம் குற்றம் கூற மாட்டோம். டார்வினின் தத்துவம் கூறுவது போல பலம் இருப்பது மட்டுமே ஜீவிக்கும். அந்த பலம் அறிவு பலமாக இருக்கலாம், ஆன்ம பலமாக இருக்கலாம், அன்பு பலமாக இருக்கலாம், பதவி பலமாக இருக்கலாம், பண பலமாக இருக்கலாம் ஆனால் பலம் மட்டுமே ஜெயிக்கும்.
நீ எத்தனை கூறினாலும் நீ இந்துவாய் இருக்கும்போது கலைஞரை தூற்ற முடியாது ஒரே காரணம் உனக்கு குழந்தை பிறந்தால் நீ ஆசீர்வதிக்கப்பட்டவன் அந்தக் குழந்தைக்கு குழந்தை பிறந்தால் நீ மேலும் ஆசீர்வதிக்கப்பட்டவன் இப்படி அவர் கொள்ளுப் பேரன் குழந்தை வரை பார்த்துவிட்டார். இன்றைய காலகட்டத்தில் கல்யாணம் ஆனபின்னால் குழந்தை பிறந்தாலே பெரிய விஷயம் என்று ஆகிவிட்டது. மகாலட்சுமி என்னுடைய புத்திரர்களை ரட்சிப்பாய் என்று தேவி மகாத்மியத்தில் வருகிறது, செல்வம் என்றால் அது குழந்தைச் செல்வமே. தசரத சக்கரவர்த்திக்கு கூட குழந்தையில்லாத பிரச்சனை இருந்தது.
தேவி மகாத்மியத்தில் பலசுருதி கூறுவது தேவியை பூஜிப்பவருக்கு வாக்குவன்மை இருக்கும், எழுத்து வன்மை இருக்கும் அடுத்தது அவரிடம் அதிகாரம் இருக்கும். மேலும் அவரிடம் செல்வம் நீக்கமற நிறைந்திருக்கும் இந்த நான்கு விஷயங்களுமே அவருக்கு ஒத்து வருகிறது. இப்படி இருக்கும்போது அவரை நாம் குறை கூறவே முடியாது அப்படிக் கூறினால் நீ தேவி மகாத்மியத்தை குறை கூறுகிறாய்.
ஒரு சுய ஒழுக்கத்துடன் உன்னுடைய வேலையை சரியாக செய்யாத நீ அவரை குறை கூறுகிறாய். உனக்கு கிடைக்கும் உனக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசு நேரம் இன்று தூங்கி நாளை எழுவோம் என்பது நிச்சயம் இல்லை அப்படி எழும் போது நமது அக்கவுன்டில் கிடைத்திருக்கும் 24 மணி நேரமும் 18 மணி நேரமோ அல்லது பன்னிரண்டு மணி நேரமும் அதை நமக்கு கொடுத்தது இறைவன் அல்லது இயற்கை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பது அவரை அவமானப் படுத்துவது அல்லவா. நீ அதைத்தான் செய்து கொண்டிருக்கிறாய் கலைஞர் அதை செய்யவில்லை அதனால் தான் அவருக்கு எல்லாம் கிடைத்தது. பரிசை வாங்கி குப்பைத் தொட்டியில் போடாமல் அவர் அந்தப் பரிசை போற்றிப் பாதுகாத்தார். அவர் தினசரி நடைப்பயிற்சி செய்து வந்தார், 65 வயதிற்கு பிறகு நடக்கும்போதே பேப்பர் படிப்பார் அவர் படித்த பின்னே பார்த்தால் அந்த பேப்பர் ஒழுங்காக மடிக்க பட்டிருக்கும் செய்யும் எந்த ஒரு செயலிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும். விடா முயற்சி, நம்பிக்கை, பொறுமை இவையே வெற்றி பெற்றவர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை.