வெங்காயத்தின் சிறப்பு

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.

1.  வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

2. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
 
3. காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச்  சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும். 
 
4. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
 
5. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 
6. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
 
7. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
 
8. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
 
9. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
 
10. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
 
11. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
 
12. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
 
13 வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.
 
14. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
 
15. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
 
16.  மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்
 
17. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட தொண்டை வலி குறையும்.
 
18. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
 
19. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
 
20..வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல்   குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

திருமந்திரமாலை – பாயிரம் -வேதச் சிறப்பு -65

திரு நெறி ஆவது சித்த சித்து அன்றிப்
பெரு நெறி ஆய பிரானை நினைந்து
குரு நெறி ஆம் சிவமா நெறி கூடும்
ஒரு நெறி ஒன்று ஆக வேதாந்தம் ஓதுமே.

திருநெறி என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது அறிவிக்க அறியும் சித்தும் அறிவித்தாலும் அறியுந்தன்மையாகிய அறிவில்லாத அசித்தும் அல்லாதவன் சிவன். இயல்பாகவே விளங்கும் பேரறிவினையுடையவன் அவன். சித்து – அறிவுடையது. அசித்து – அறிவில்லது. அவன் வகுத்தருளிய நன்னெறி பெருநெறி என வழங்கப்பெறும். அந் நெறியின் முதல்வனும் சிவபெருமானே. அப் பெருமானையே நினைக்கும் திருவடி யுணர்வை நல்கியருளும் சிவகுரு எழுந்தருள்வது குருநெறியாகிய சிவமாநெறிக்கண் என்று கொள்க. அதுவே திருவடியின்கண்கூடச் செய்யும் ஒப்பில்லாத் தனிநெறி. இவற்றை ஒருங்கு ஓதுவது மறைமுடிவாம் வேதாந்தம் எனப்படும். மூவர் தமிழ் மறையும், முனிவராம் மணிமொழியார் தமிழ் மறை முடிவுமென இஞ்ஞான்றும் கொண்டு ஒழுகுவதே செந்நெறிச் செல்வரின் சீரிய கடன்.

குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: இல்லறவியல். அதிகாரம்: மக்கட்பேறு.-65

குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
பரிமேலழகர் உரை:
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் – ஒருவன் மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்; செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் – செவிக்கு இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். (‘மற்று’ வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும் இன்பமாகலின், பொதுப்படச் ‘சொல்’ என்றார். ‘தீண்டல்’, ‘கேட்டல்’ என்னும் காரணப்பெயர்கள் ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.).
Translation:

To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.

Explanation:

The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.

அழகான வரிகள்….

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை..

நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.

ஆசை படுவதை மறந்து விடு.. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!

மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை..

சில நேரங்களில் தனிமை கடினம்.. சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!..

மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை..

புரியாததை புரிந்து கொள்ளுங்கள்.. புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.. வெற்றி நிச்சயம்!

வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும்.. அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!

அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!

நீ சிரித்து பார்.. உன் முகம் உனக்கு பிடிக்கும்..!
மற்றவர்களை சிரிக்க வைத்து பார்.. உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்..!

நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்

வளர்ந்த பின் வளைவது பெருமை.. வளைந்தே இருப்பது சிறுமை..

விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை
வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

சுண்டக்காய் மகத்துவம்

அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள்

காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது.

ஆஸ்துமா, வறட்டு இருமல், மார்புசளி, காசநோய் தொந்தரவு இருப்பவர்கள், தினம் இருபது சுண்டைவற்றலை சிறிது நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிடவேண்டும். நோய் கட்டுப்படும். இது வயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்கும் இயல்புடையது. மூலத்தில் ஏற்படும் கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிற்று கோளாறுகளுக்கும் சிறந்த மருந்தாகின்றது.

சுண்டைக்காயில் வைட்டமின் பி மற்றும் சி சத்து அதிகம் உள்ளது. 100 கிராம் காயில் 22.5 மி.கி. இரும்பு சத்தும், 390 மி.கி. கால்சியமும், 180 மி.கி. பாஸ்பரசும் உள்ளது.

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்க சுண்டைக்காய் உதவும். குழந்தையாக இருக்கும்போதே அவர்களுக்கு சுண்டைக்காயை உணவில் சேர்த்து, சாப்பிட பழக்கவேண்டும். சுண்டைக்காயை மாதம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால், வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிக்கப்பட்டுவிடும்.

மூல நோய் உள்ளவர்கள் ஒரு கைபிடி அளவு சுண்டைக்காயை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், மூலத்தில் உள்ள கடுப்பு நீங்கும். மூல நோயால் உண்டாகும் ரத்தக் கசிவும் நீங்கிவிடும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு, மூட்டுவலி போன்றவைகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ளவேண்டும்.

சுண்டைவற்றல் சூரணத்தை தினம் ஒரு தேக்கரண்டி மோரில் கலந்து ஒரு மாதம் காலை, மாலை சாப்பிட்டுவந்தால் தொல்லை தரும் வயிற்று நோய்களில் இருந்து விடுபடலாம். சுண்டைக்காய் சிறுநீரை பெருக்கும் தன்மைகொண்டது. கல்லீரல், மண்ணீரல் நோய்களையும் நீக்க உதவுகின்றது.

சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம்

தெரிந்து கொள்ளலாமே….

1. ‘தாழ்ப்பாளை சும்மா போட்டு லொட்டு லொட்டுனு ஆட்டக்கூடாது. அப்படிச் செய்தா… வீட்டுல சண்டை வரும்.’

அதாவது, தாழ்ப்பாளை அடிக்கடி ஆட்டினால், கதவுடன் இணைக்கப்பட்டிருக்கும் தாழ்ப்பாள், லொட லொடக்க (ஸ்க்ரூ, சக்கை கழன்று) ஆரம்பித்துவிடும். திருடர்கள் வீட்டுக்குள் சுலபமாக வருவதற்கு நாமே வழி ஏற்படுத்தியது போலாகிவிடும்.

2. ‘வீட்டுக்குள்ள நகம் வெட்டினா… வீடு விளங்காது.’

வெட்டித் துண்டாகும் நகம் எங்காவது தெறித்து விழும். சமயங்களில் உணவுப் பொருளில்கூட கலக்க வாய்ப்புண்டு. காலில்கூட அது ஏறி… வில்லங்கத்துக்கு வழிவகுத்துவிடும்.

3. ‘நகத்தைக் கடித்தால் தரித்திரம்.’

நக இடுக்குளில் உள்ள அழுக்கு, வாய் வழியாக உடலுக்குள் சென்று, பல்வேறுவிதமான நோய்களுக்கு வழி ஏற்படுத்திவிடும்.

4. ‘உச்சி வேளையில கிணத்தை எட்டிப் பார்க்கக் கூடாது.

கிணற்றுக்குள் பல்வேறு விஷவாயுக்கள் உற்பத்தியாகும். உச்சிவெயில் நேரத்தில் நேரடியாக சூரிய வெளிச்சம் கிணற்றுக்குள் விழுவதால் அந்த வாயுக்கள் வெப்பத்தால் லேசாகி மேலே பரவும். எட்டிப் பார்ப்பவர்களை அது தாக்கினால் ஆபத்து.

5. ‘இருட்டிய பிறகு குப்பையை வெளியே கொட்டினால் லட்சுமி வெளியே போய்விடுவாள்.’

வீட்டுக்குள் பகல் முழுக்க நடமாடும் நாம், ஏதாவது சின்னஞ்சிறு நகை போன்ற பொருட்களை தவறவிட்டிருந்தால், அது குப்பையில் சேர்ந்திருக்கும். இரவு நேரத்தில் அள்ளி தெருவில் கொட்டிவிட்டால், பிறகு தேடிக் கண்டுபிடிப்பது சிரமத்திலும் சிரமம்.

6. வீட்டில் புறா வளர்க்கக் கூடாது. வளர்த்தால் குடும்பம் அழிந்துவிடும்.’

புறாக்கழிவுகளின் வாசனை பாம்பை ஈர்க்க வல்லது. அதனால் அதைத் தேடி விஷப்பாம்புகள் வரும்.

7. ‘இரவு நேரங்களில் கீரை சாப்பிட்டால்… எமனுக்கு அழைப்பு வைப்பதுபோல!’

கீரை எளிதில் ஜீரணமாகாது. அதிலும் இரவில் சாப்பிட்டுப் படுத்தால், தேவையற்ற உடல் தொந்தரவுக்கு வழி வகுத்துவிடும். எனவே, பகல் வேளைகளில் மட்டுமே அதைச் சாப்பிட வேண்டும்.

8. ‘புளிய மரத்துக்கு கீழே படுத்தால் பேய் அடிக்கும்.’

புளிய மரம் இரவில் அதிக கார்பன் டை ஆக்ஸைடு வாயுவை வெளியிடும். அதனால் மூச்சுத்திணறல் கூட ஏற்படலாம். இதைத்தான் அமுக்குவான் பிசாசு என்றுகூட சொல்வார்கள்.

9. முருங்கை மரம் வாசலில் வைத்தால் வீட்டுக்கு ஆகாது.’

மரங்களிலேயே மிகவும் மென்மையான மரம் என்பதால், குழந்தைகள் ஏறினால்கூட பட்டென்று கிளைகள் முறிந்து, விபத்துக்கு வழி வகுத்துவிடும். தவிர, அதில் வரும் கம்பளிப்பூச்சி உள்ளிட்டவை எளிதாக வீடு தேடி வந்து தாக்குதல் நடத்தும்

10. தலைவிரி கோலமாக பெண்கள் இருக்கக் கூடாது...’

சமைக்கும்போதும்… பரிமாறும்போதும் உணவில் தலைமுடி விழுந்து, அருவருப்பு ஊட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக!

11. . ‘வடக்கே தலை வைத்துப் படுக்கக் கூடாது.’

பூமியின் காந்த சக்தியானது வடதுருவத்தை நோக்கி நிற்கிறது. வடதிசையில் தலை வைத்து படுக்கும்போது அதன் ஈர்ப்பு சக்தியானது நம் தலையையும் மூளையையும் தாக்குகிறது. அதனால் ஆரோக்கியம் குறையும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு.

12. . ‘வாழை இலை போடாமல் விசேஷம் நிரக்காது.’

இந்த இலையில் ‘பினாலிக்ஸ்’ எனும் இயற்கை சத்து உள்ளது. இதில் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும் என்பது ஆராய்ச்சி முடிவு. இதை அனுபவத்தில் கண்டுணர்ந்து காலகாலமாகக் கடைபிடிக்கிறார்கள்.

Banana vendor rocked and EB officer shocked

ஒரு Electricity Board Office, வெளில ஒரு வாழைப் பழக்காரா், வாழைப்பழம் வித்து கொண்டு இருக்கிறார், அவரிடம்…

EB ஆபிஸர் :: வாழைபழம் என்னபா விலை..?

வியாபாரி :: சார் , இத எதுக்கு நீங்க வாங்குரீங்கனு தெரிஞ்சா தான் சார் விலை செல்ல முடியும்…?

EB ஆபிஸர் :: என்னபா சொல்ற, நான் எதுக்கு வாங்குனா உனக்கு என்ன..??

வியாபாரி :: இல்ல சார் , நீங்க இந்த வாழபழத்த கோயிலுக்குனு வாங்குனா விலை 10 ரூபா ஒரு பழம்.

குழந்தைகளுக்குனு வாங்கினா Rs ஒரு பழம் 20 ரூபா.

தெரிஞ்சவங்க வீட்டுக்கு வாங்குனா விலை 25 ரூபா.

நீங்க சாப்பிட வாங்கினா ஒரு பழம் 30 ரூபா சார்…..

EB ஆபிஸர் :: யோவ், யார ஏமாத்துற ஒரே பழம் எப்படியா different different விலைக்கு வரும்…??

வியாபாரி :: This is my tariff plan.
..நீங்க மட்டும் ஒரே கரண்ட், ஒரே transmission சிஸ்டம் வச்சிகிட்டு…..வீட்டுக்கு தனி, கடைக்கு தனி, பேக்டரிக்கு தனி விலைனு விப்பீங்க….கேட்ட tariffனு சொல்லூவீங்க..

வாழ்கையின் ரகசியம்

எல்லா உறவுகளும் கண்ணாடி மாதிரிதான். நாம் எப்படிப் பழகுகிறோமோ அப்படித்தான் அதன் பிம்பங்களும்.

 தடுமாறும் பொழுது தாங்கிப் பிடிப்பவனும், தடம் மாறும் பொழுது தட்டிக் கேட்பவனுமே உண்மையான நண்பன்.

 உங்களைப் புரிந்து கொண்டவர்கள் கோபப்படுவதில்லை. உங்களைப் புரியாதவர்களின் கோபத்தை நீங்கள் பொருட்படுத்த வேண்டியதில்லை.

 குழந்தைகளிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருந்தோம் என தெரியும். வயதானவர்களிடம் பழகிப் பாருங்கள். நாம் எப்படி இருக்கப் போகிறோம் என தெரியும்.

ஒருவர் உன்னைத் தாழ்த்திப் பேசும் போது ஊமையாய் இரு. புகழ்ந்து பேசும் போது செவிடனாய் இரு. எளிதில் வெற்றி பெறுவாய்.

சங்கடங்கள் வரும்போது தடுமாறாதே. சந்தர்ப்பங்கள் வரும் போது தடம் மாறாதே.

 வளமுடன் வாழும் போது நண்பர்கள் உன்னை அறிவார்கள். பிரச்சினைகள் வரும் பொழுது நண்பர்களை நீ அறிவாய்.

 ஒருமுறை தோற்றுவிட்டால் அதற்கு நீ ஒருவரைக் காரணம் சொல்லலாம். தோற்றுக் கொண்டே இருந்தால் அதற்கு நீ மட்டுமே காரணம்.

நீ சிரித்துப் பார்! உன் முகம் உனக்குப் பிடிக்கும். மற்றவர்களை சிரிக்க வைத்துப் பார். உன் முகம் எல்லோருக்கும் பிடிக்கும்.

அவசியம் இல்லாததை வாங்கினால், விரைவில் அவசியமானதை விற்க நேரிடும்.

வாழ்க்கையில் தோற்றவர்கள் இரண்டு பேர். ஒருவர், யார் பேச்சையும் கேட்காதவர். மற்றொருவர், எல்லோர் பேச்சையும் கேட்பவர்.

 எண்ணங்களை அழகாக மாற்ற முயற்சி செய்தாலே போதும். வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறிவிடும்.

 நீ ஒருவனை ஏமாற்றிவிட்டால் அவனை முட்டாள் என்று நினைக்காதே. நீ ஏமாற்றியது அவன் உன்மேல் வைத்த நம்பிக்கையையே.

அமைதியாய் இருப்பவனுக்குக் கோபப்படத் தெரியாது என்பதல்ல அர்த்தம். கோபத்தை அடக்கி ஆளும் திறமை படைத்தவன் என்பதே அர்த்தம்.

மரியாதை வயதைப் பொறுத்து வருவதில்லை. அவர்கள் செய்யும் செயலைப் பொறுத்தே வருகின்றன.

எது பலம்

ஒருநாள் சாவியைப்பார்த்து, சுத்தியல் கேட்டது.

“உன்னைவிட நான் வலிமையானவனாக இருக்கிறேன். ஆனாலும் ஒரு பூட்டைத் திறக்க நான் மிகவும் சிரமப்படுகிறேன். ஆனால் நீ சீக்கிரம் திறந்து விடுகிறாயே அதெப்படி?”

அதற்கு சாவி சொன்னது. “நீ என்னை விட பலசாலிதான். அதை நானும் ஒப்புக் கொள்கிறேன். பூட்டைத் திறக்க நீ அதன் தலையில் அடிக்கிறாய். ஆனால் நான் பூட்டின் இதயத்தைத் தொடுகிறேன்” என்றதாம்.

கண்ணாடி சொல்லும் மூன்று பாடம்

“கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”

நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம்- கணவரிடம்/ மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும். எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது. துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.

“கண்ணாடி சொல்லும் இரண்டாவது பாடம்!”

கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும். அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும்.அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது

“கண்ணாடி சொல்லும் மூன்றாவது பாடம்!”

ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா? இல்லையே…!

அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும். அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.

இனி கண்ணாடி முன்னால் நின்று முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் உங்கள் மனதை அலங்கரிக்கட்டும்…