“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

Shri Raja Rajeswari Prarthana Trust

 

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்டின் குறிக்கோள்கள்

 

 1.  அன்பின் ஆற்றலை மக்களுக்கு உணர்த்துதல்

 2.  உடலின் சிறப்பையும், உடல் ஆரோக்கியமாக இருக்கும் அறிவை போதித்தல்.

 3.  சுய கட்டுப்பாட்டையும் அதனுடைய மேன்மையையும்,மகத்துவத்தையும்   மக்கள் அறியும்படி செய்தல்.

 4.  அறிவிற்கும், புத்திக்கும், அன்பிற்கும் உண்டான நிலைகளை உணர்த்துதல்.

 5.  ஒவ்வொரு குடிமகனின் தலையான கடமை நாட்டை போற்றுதலும்,  நாட்டை வளர்ச்சிக்கு உரிய பாதையில் செலுத்துவதற்கு உண்டான பொறுப்பை மனதில் பதிய வைத்தல்.

 6.  அன்போடும், அறத்தோடும் வாழும் வாழ்க்கை தான் சிறந்தது என்பதை மக்கள் மனதில் பதிய வைத்தல்.

 7.  உடல் நலத்திற்கு முக்கியத்துவம் தருவது போல் உள்ளத்தின் மேன்மைக்கும் உண்டான யுக்திகளை கற்றுக் கொடுத்தல்.

 8.  கல்வியின் சிறப்பை எல்லோரும் அறிய ஊக்குவித்தல்.

 9.  நம் நாட்டின் அரும்பெரும் கலைகளை பாதுகாக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தை உருவாக்குதல்.

 10. நாட்டிற்கும், வீட்டிற்கும் உள்ள தொடர்பை மக்களுக்கு அறிவித்தல், அதை உணர்த்துதல்.

 11. தியானத்தையும், பிரார்த்தனையையும் அதனுடைய சக்திகளையும் மக்களுக்கு போதித்தல்.

 

தர்மம் தலை காக்கும்                                             தக்க

 

சமயத்தில் உயிர் காக்கும்