“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

குடியரசு தினம் - 26.01.2014Back

 

குடியரசு தினம் - 26.01.2014

        இந்தியாவின் 65-வது குடியரசு தினம் கோவை பச்சாபாளையம் நடுநிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதில் ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், சௌந்தர்யா கார்டன் குடியிருப்போர் அமைப்பு, இராமகிருஷ்ணா செவிலியர் பள்ளி என்.எஸ்.எஸ் மாணவ கண்மணிகள், ஊர்க் கவுண்டர் மற்றும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்ட் உறுப்பினர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் இணைந்து எல்லோருக்கும் இனிப்பு வழங்கி குடியரசு தின விழா கோலாகமாகக் கொண்டாப்பட்டது.

                குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் மனதை கொள்ளைகொள்வதாய் அமைந்தது அக்னி சிறகுகள் டாக்டர் .ஜே.அப்துல் கலாமின் நூலைப் பற்றி பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் இறையான்மையை, ஜனநாயகத்தை காப்பதற்கும் இந்தியாவின் நலனை மட்டுமே கருத்தில் கொள்வோம் என மாணவ கண்மணிகள் உறுதிமொழி எடுத்தனர்.

                இதனை திறம்பட நடத்திய பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்ட் தனது மனப்பூர்வமான பாராட்டுதலை அன்போடு தெரிவித்துக் கொள்கிறது.