“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.Back

 சரணம் சரணம் குருப்பாதுகையே சரணம். ஜெய ஜெய ஓம் சிவாய நம ஒம்

 
ஸ்ரீ உமாமகேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.
 
விழா பற்றி விபரங்கள் ......
ஸ்ரீ ராஜராஜேஷ்வரி பிரார்த்தனா டிரஸ்ட் தலைவர் பி. ஆத்மா 
அவர்களும், மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள், கிராமத்துப் பொது மக்களும் சேர்ந்து நடத்திய திருவிழா.  கோவில் சிறியதாக இருந்தாலும், விழா பெரிதாக மிகச் சிறப்பாக நடந்தேறியது.
ஒரு கும்பாபிஷேகத்தைப் பார்த்தாலே நூறு கோவில் கும்பாபிஷேகம் பார்த்த புண்ணியம் என்பார்கள். அதனால் இந்த தை அஸ்தம் எப்போதும் வருடா வருடம் ஆண்டு விழாவாக அமையும். இந்த வருடம் கும்பாபிஷேகம் நடந்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்து மற்ற எல்லோரையும் வைத்து திறம்பட செய்து காட்டி எல்லோருக்கும் கோடிப்புண்ணியத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.  ஆம் கும்பாபிஷேக-த்தைப் பற்றி பேசின நாள் முதலில் இருந்தே த்யானம், ஜெபம், கூட்டு வழிபாடுகள் தொடங்கியதிலிருந்தே விழா ஆரம்பம் ஆனது.
உமாமகேஸ்வரர் கோவிலில் மாலையில் ஆண்களும், பெண்களும் 
'' ஓம் நமசிவாய நம ஓம், சிவாய நம ஓம்'' என்று கூட்டு வழிபாடுகள் நடந்தது.
பூஜையின் பயன்கள் .....
பூஜையானது தனக்கு பயன் தருவதும், தனக்கும், பிறர்க்கும் பயன் தருவதும், பிறர்க்கு பயன்தருவதும் என மூன்று வகையாகும்.  அதாவது ஆன்ம லாபங்கருதி வீட்டில் செய்கின்ற சலலிங்கார்ச்சனை தனக்கே பயன் தருவதாகும்.  ஆதிசைவர்கள் உலக நலங்கருதி சிவாலயத்தில் செய்கின்ற ஸ்திர லிங்கார்ச்சனையானதாகும்.  தனக்கும், பிறர்க்கும் பயன் தருவதாகும்.  ஒருவனுடைய ஆத்மார்த்தத்தை பிறிதொருவன் ஏற்று செய்துவது, பிறர்க்கே பயன் தருவதாகும்.  ஆலயத்திலுள்ள ஸ்திரலிங்கார்ச்சனம், நித்தியம், நைமித்கம், காமியம் என மூன்று வகைப் பட்டு ஒவ்வொன்றும், சிற்சில உட்பிரிவுகளை உடையதாய் இருக்கும்.
 
கோவிலில் சேவை செய்வதின் பயன்கள் .....
சன்னதிகளில் உள்ள குப்பைகளை மெல்லிய துடப்பத்தினால் விலக்குபவர்கள் காமம், வெகுளி, மயக்கம், பொய் ஆகிய குப்பைகள் நீங்கி பரிசுத்தமாவார்கள், தத்துவ ஞானமென்னும், நறுமணம் கமழும் சாணத்தைக் கொண்டு, அன்பென்னும் ஜலத்தை கலந்து மெழுகியவர்களுக்கு, மனக்கோயிலில் சிவலிங்கம் தோன்றப் பெறுவார்கள். திருவிளக்கை ஏற்றுபவர்களும்,  தீபங்களை தாங்குபவர்களும், கண்ணாடியைத் தாங்குபவர்களும், சிவ ஞானத்தை அடைவார்கள்.  தூபம் தாங்குபவர்கள் ஆண்வமல சக்தி நீங்கப் பெறுவார்கள்.  சாமரையான் பணி செய்பவர்கள் மல நிவாரணத்தையும், திருவருட் செல்வத்தையும் அடைவார்கள்.  குடை பிடிப்பவர்கள், ஆக்ஞா சக்ரத்தையும், பலத்தையும் அடைவார்கள்.  வாகனம் தாங்குபவர்கள் கணநாதராய்த் திருக்கைலாய மலையை அடைந்து இன்பமுடன் இருப்பார்கள்.  கற்பூர தீபம் தாங்குபவர்கள் அத்துவித முக்தியை அடைவார்கள்.
கும்பாபிஷேக சாந்தி ....
கும்பாபிஷேகத்தை பெரும் சாந்தி என்று கூறுவார்கள்.  சாந்தி என்பது பிராயசித்தம்.  அது மனம், வாக்கு, காரியங்களினால் அறிந்தும், அறியாததும், செய்த வினைகள், பாபங்களை, கர்மாக்களை வேறு எல்லா வகையிலும், தீராத சிவாபரதங்களைத் தீர்க்கும்.  மஹா கும்பாபிஷேகம் தரிசன பலனாகும்.  கும்பாபிஷேகம் செய்தால் பெரிய பாவங்களின்று விடுபடலாம் என்று பெரியோர்களும், சைவநூல்களும் கூறுகிறது.
யாக சாலை சுத்தி .....
சயன வேதிகா மண்டபம் அமைத்து, ஏக குண்டம் போட்டு அதற்க வெள்ளை அடித்து, தரைக்கு சுத்தமாக நீர் தெளித்து, சாணம் மெழுகி, கோலம் போட்டு சுத்தம் செய்தவுடன் ஆச்சார்யார்களும் வந்து யாகசாலை சுத்தி செய்வார்கள்.  யாகசால என்னும் சொல்லுக்கு பொருள், யகாரம் யாகத்தையும், ககாரம் செல்லுதலையும், சகாரம் சுகத்தையும், லகாரம் லயத்தையும் குறிப்பதால் யாகசாலை என்று சொல்லுக்கு ஞானயாகத்தால் லயஸ்தானத்தில் சுகத்தினத்தின் பொருட்டு செல்வது என்ற பொருளாகும். எனவே, ஞானயாகம் செய்வதற்குரிய ஸ்தானம் யாக சாலையாகும்.
யாகசாலை சுத்தி செய்தபின் ஆச்சாரியார்கள் அவர்களைத் தவிர யாரையும் உள்ளே விடமாட்டார்கள். கங்கணம் கட்டியிருந்தால் மட்டுமே விடுவார்கள்.
வாஸ்து பூஜை .....
ஆலயத்திலுள்ள விக்கிரங்களுக்கும், மற்ற அன்னியமான சக்திகளுக்கும் வாஸ்து பதம் சாந்தி செய்தல் வேண்டும்.  கிழமேல் தென்வடலாக பத்து பத்து சூத்திரங்களடித்து எண்பத்«£று பதங்களாக்கி இதன் நடுவிலுள்ள ஒன்பது பதங்களை ஒன்றாகச் சேர்த்து எட்டிதழ்கமலம் இதில் கற்பித்து இதற்கு வெறியிலுள்ள மூன்று வீதிகளில் உள்ள வீதியில் மூன்றுபதமும், வெளிவீதியில் மூன்றுபதமும், ஆக பதம் ஷட்பத ஸ்தானங்களாகும்.  கோணங்களில் பத்மத்திற்கு வெளியே ஒரு பதமும், இதற்கு மேல் ஒரு பதமும், துவந்தபதமென்பதாம்.  இதற்கு வெளியே எட்டு பதங்களோடு கூடிய ஸ்தானங்களாகும்.  இதற்கு வெளியே ஈசான முதல் வாயு வரை திக்கு விதிக்குகளில் எட்டு சூலம் கல்ப்பித்து விருத்தம், தளம் ரஜ்ஜ § பூபுரம் இவைகளை மண்டூக பதத்திற் கூறியவாறு கல்ப்பித்துக் கொள்வதாம்.
முதலில் பதத்திற்கு பூஜை அன்னபலி, நெய்வேத்தியாதி உபசாரங்கள் செய்து பின் கும்பபூஜை செய்து அதன்பின் பாலாக்னி வரை அக்னி காரியஞ் செய்து பிரம்மா முதலியவர்களை ஆவாஹனஞ் செய்து ஹோமம் செய்ய வேண்டும்.
பதம் கும்பம் அக்னி இவைகளுக்கு நாடீ சந்தானம் செய்து பூர்ணாகுதி கொடுத்து அந்தர்பலி, பஹிர்பலி போடவும்.
பின்னர் கூஷ்மாண்ட ஹோமத்தின் பொருட்டு பரிஸ்தரணத்திற்கு வெளியே பத்மமண்டலத்தின் மேல் பூஷணிக்காயை வைத்தும் , யஞ்ஞவிருக்ஷங்களால் செய்யப்பட்ட வாஸ்துபிரும்மாவை பிம்பாகிருதியாய்ச் செய்து பலகையில் மேல் வைத்து சின்ன வண்டிங்ச சக்ரம் போட் யுக்தியாய்ச் செய்து காய்ந்த தர்ப்பை, தென்னை மட்டை இவைகளைச் சேர்த்து ஐந்து முள நீளம் 20 அங்குலப் பெருமன்பரியக்னி காரணத்தின் பொருட்டு உலக்காமுகம் ( சூந்து ) ஒன்று கட்டி வாஸ்து பிரும்மாவின் வலக்கையில் யுக்தியாய் கட்டுதல் வேண்டும். இதற்க வலப்புரத்தில் கத்தி ஒன்று வைத்து அதற்கும் நிரீக்ஷணாதி சுத்தி செய்து பூஜை செய்ய வேண்டும்.  இந்த பூசணிக்காய் பூமியின் வடிவமாய் பாவித்து மண், ஜலம், தீ, வாயு, ஆகாசம் முதலிய பஞ்ச பூதங்களோடு சேர்ந்துள்ளதாய் ஞானயாகாங்க பூதமான உன்னை பூமியின் விக்ன நிவிருத்தியின் பொருட்டுச் சேதித்து சிருஷ்டி கர்த்தாவான பிரும்மாவை ஆவிர்ப்பயாகம் செய்விக்கும் பாவனையாகும்.
பிறகு பரிகாரம் செய்பவரை அழைத்து அவருக்கு மரியாதை செய்து, அதாவது, புதுத் துணிமணிகள் உடுத்தச் செய்து, நெற்றியில் திலமிட்டு, கழுத்தில் மாலை போட்டு, தாம்பூலம், தக்ஷிணை கொடுத்து கத்தியால் பூசணிக்காயை  ( இந்த பூமி நிர்மலமானதாக பாவிக்க )  வேண்டி இந்த அண்டத்திற்கு காரணமாயுள்ள விரையை ஹோமம் செய்க.
பூஜித்த தேவதைகளை சம்யோஜனம் செய்து வாஸ்து பிரம்மாவை இழுத்து சூந்து கொழுத்தி கோயில் யாகசாலை, கிராமம், முதலிய வாஸ்து வீதிகளில் அந்து சூந்து அக்னி தரையில் படும்படி இழுத்து ஈசான திக்கில் எரிந்து விட வேண்டும் இந்த பரியக்னி கரணம் செய்த விடத்தில் புண்ணியாக பஞ்ச கவ்வியத்தால் சுத்தி செய்தல் வேண்டும்.
பிரும்மா முதல் லோக பாலர்வரை பூஜிப்பது சரவாஸ்துவாகும்.  அழ உத்ஸவத்திற்காகும்.  பிரும்மாஷ்டகத்தைப் பூஜித்து பின் பிரும்மாவை பூஜித்து லோகபாலர் முதல் ஷட்பதம் வரை பூஜிப்பது, உபயவாஸ்துவாகும்.  இது பிராயஸ்சித்தத்திற்காகும்.  லோகபாலர் முதல் பிரும்மாஷ்டகம் வரை பூஜிப்பது ஸ்திரவாஸ்துவாகும்.  இவை பிரதிஷ்டைக்குச் செய்யத்தக்கதாம். இவ்வாறு மூன்று பேதங்களும் தெரிந்து அந்தந்தக் கிரியைகளுக்கு உரியனவற்றைச் செய்வது உத்தமமாகும்.
பரியக்னி கரணத்தின் முடிவில் பரிகாரத்தைச் செய்தவர்கள் விதிவத்தாய் ஸ்நானஞ் செய்து விபூதி இட்டுக் கொள்ள வேண்டும்.
பஞ்ச கவ்வியம் ......
பஞ்ச கவ்வியமென்பது பாவத்தைப் போக்கி ஆத்மாவை சுத்தி செய்து ஜனன மரணங்களை நீக்கி மோக்ஷத்தை கொடுக்கும் எனப் பொருள்.  மேலும், பசுவின்பால், ஜ்வரம், ரணம், சூலை, துர்பலம் இவைகளை நீக்கும்.  பசுவின் தயிர், ஆயாசம், காசம், எரிச்சல் இவைகளை நீக்கும். பசுவின் நெய், பித்தம், மூலம், விஷம், இவைகளை நீக்கும்.  பசுவின் கோஜலம், காமாலை விஷபாண்டு ஆகிய நோய்களை நீக்கும்.  பசுவின் கோமயம் தேஹசுத்தி உண்டாக்கும்.  கிருமி, நோய் இவைகளை நீக்கும்.  குசோதகம் கபம், விஷஜ்வரம், தாகம், நமைச்சல் இவைகளை நீக்கும்.  இவ்வாறு ஒவ்வொரு பதார்த்தங்களும் நற்பயனைத் தந்து உடலுறுதியையும் உண்டாக்குமென்பதாகும்.  இதனால் முக்கிய காரியங்களுக்கு பஞ்சகவ்வியம் பயனானதாகும்.