“Thedi Thedi itta Pichayum
Naadi Naadi Seitha Dharmamum
Nammai Kakkum”

ஸ்ரீ உமாமகேஷ்வரர் ஆலய 18வது ஆண்டு விழாBack

18 - ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா, அருள்திரு. ஆத்மா அவர்களின் ( தலைவர் ராஜராஜேஸ்வரி பிரார்த்தனா டிரஸ்ட் ) தலைமையில் இனிதாக இன்று 29.1.2016.மிகச் சிறப்பாக நடந்தது.  அதன் விபரம் வருமாறு....
 
அதிகாலை  அர்ச்சனை ஆரம்பித்து,அதிகாலை  4.10 - க்கு ஆவாஹனம், சங்கல்பம் முடிந்து, ஹோமம் தொடங்கியது.  ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சிவதுர்க்கை, ஸ்ரீ சிவ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ நவக்கிரஹ ஹோமமும், ஸ்ரீ உமாமகேஸ்வரர், ஸ்ரீ ருத்ரம், ஸ்ரீ மிருத்துஞ்சய ஹோமமும் நடை பெற்றது.
 
ஹோமத்தில் பிரசாதமாக, நெல்பொறி, அவல், கரும்புசர்க்கரை, பொட்டுக்கடலை, கொப்பரை தேங்காய் சிறிதுசிறிதாக நறுக்கியது, சர்க்கரைப்பொங்கல், பால் பாயசமும், எலுமிச்சைசாதம், எள்சாதம், சுண்டல், 108 திரவியப்பொருள்களும், பலவகையாக சமித்து ( குச்சிகள் ) களும்,  நெய்யுடன் கலந்து செய்யப்பட்டன.   பிறகு 5.50 - க்கு  பூர்ணாஹ§ தி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
 
                இது ஒரு புறம் இருக்க பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சிவாய நம ஓம், நமச்சிவாய நம ஓம் என்று கோஷமுழக்கத்துடன் சொல்லிக்கொண்டி- ருப்பார்க்ள்.  சரியாக காலை 6.40 - க்கு மஹா அபிஷேகம், பால், பழங்கள், தயிர், நெய், தேன், திரவியப்பொடிகள், பழ ரசங்கள், இளநீர், பிறகு கலசத் தீர்த்தால்( 18 கலசங்கள் ) விநாயகர், முருகர், துர்க்கை, ஸ்ரீ பாதம், சண்டிகேஸ்வரர், உமாமகேஸ்வரருக்கும் அபிஷேகம் சிவாயநமஓம் கோஷங்கள் முழங்க நடைபெற்றது.   உமாமகேஸ்வரருக்கு அலங்காரம் நடைபெறும் இந்த இடைப்பட்ட வெளியில் அம்பாளின் ஸ்ரீ லலிதா த்ரிசதி பாராயணம், மற்றும் இருதெய்வங்களின் கீர்த்தனைகள் மிக அற்புதமாக பாராயணம் செய்தார்கள்.
 
                மஹா தீபாராதனை, பிரசாதமும் வழங்கப்பட்டது.  வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் நடைபெற்றது. இந்த விழாவை தலைவர் ஆத்மா அவர்களும், உறுப்பினர்களும் நல்ல முறையில் நடத்தினார்கள்.  பக்தர்கள் அன்னதானத்துடன், அருட்பிரசாதத்தையும் வாங்கிச்சென்றார்கள்